Penbugs
Editorial NewsInspiring

காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் வீர மரணம்..!

கடந்த சில நாட்களாக ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதால் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் விதமாக ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் நேற்று மீண்டும் ராணுவ வீரர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
அப்போது பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். எனினும் இந்த சண்டையில் இந்திய பாதுகாப்பு படையினர் மூவர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வீரரும் வீர மரணம் அடைந்துள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே இருக்கும் மூன்றுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். 31 வயதான இவர் சிஆர்பிஎப்-ன் 92வது பட்டாலியனில் பணியாற்றி வந்தார்.

பயங்கரவாதிகளின் ஊடுருவலுக்கு எதிராக நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் சந்திரசேகர் பங்கேற்றிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக படுகாயமடைந்த அவர் வீர மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சந்திரசேகரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகிறது. 2014ம் ஆண்டு பணியில் சேர்ந்த சந்திரசேகருக்கு மனைவியும் ஒன்றரை வயதில் ஆண்குழந்தையும் உள்ளது. தமிழக வீரருடன் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்த இரு வீரர்களும் மரணமடைந்தனர்.

Related posts

சிஆர்பிஎப் வீரர் சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

Penbugs

Three Indian photographers win Pulitzer for J&K coverage

Penbugs

India to get two new UTs as Kashmir’s special status, Article 370 goes!

Penbugs