கேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா…!

CLICK HERE TO SEE DETAILED STATISTICS

India

Confirmed
160,310
+2,224 (24h)
Deaths
4,560
+26 (24h)
Recovered
68,713
42.86%
Active
87,037
54.29%

Worldwide

Cases
5,825,342
+40,739 (24h)
Deaths
358,235
+1,298 (24h)
Recovered
2,522,722
43.31%
Active
2,944,385
50.54%
Powered By @Sri

கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்வதையடுத்து புதிதாக 26 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புகளில் மஹா., முன்னிலையில் உள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. கொரோனா பாதிப்புகள் குறித்து நேற்று (மே.,14) கேரள முதல்வர் பினராயி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், மாநிலத்தில் மேலும் 26 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.இதையொட்டி சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 64 ஆக இருந்தது.

மாநிலத்தில் புதிதாக நோய் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் , மற்ற 7 பேர் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள். கொரோனா பாதிப்பு தொடர்பாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், படாவிட்டாலும் நோயின் தீவிரத்தை அறிந்து மக்கள் செயல்பட வேண்டியது அவசியம். இதுபோன்ற கடினமான காலகட்டத்தை எதிர்கொள்ள வேண்டியநிலையில் உள்ளோம். மக்களும் மாஸ்க், சமூக இடைவெளி, கிருமிநாசினி மற்றும் கைகளை கழுவுதல் போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.
இதுவரை கேரளாவில் மொத்தம் 560 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 64 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 36,362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். 548 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கண்காணிப்பில் உள்ளனர். மாநிலத்தில் 15 ஹாட்ஸ்பாட் பகுதிகள் உள்ளன. இவ்வாறு தெரிவித்தார்.