Penbugs
Cinema

மகாமுனி..!

மௌன குரு படம் எந்த ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் மௌனமா வந்தபோதும் அது சில சில ஓசைகளை எழுப்பியது. தமிழ் சினிமாவில் இப்படிகூட ஒரு திரைக்கதையை அமைக்க முடியுமா என்ற வினாவையும் , சாந்தகுமார் என்ற இயக்குனர் மீதான பார்வையையும் பதித்தது …!

எப்பொழுதுமே விமர்சனம் மற்றும் ஓரளவு படம் வசூல்ரீதியாக ஓடி விட்டால் அடுத்து அடுத்து படம் பண்ணுவதுதான் இயக்குனர்களின் பாணி அதில் தவறும் இல்லை குடும்ப சூழல் ,பொருளாதார சிக்கல்கள் என பல வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் அது ஆனால் சாந்தகுமார் தன் அடுத்த படத்திற்கு வர எட்டு வருடங்கள் ஆகி இருக்கிறது.

இசை வெளியீட்டு விழாவில் ஆர்யா கூறியது சாந்தகுமார் முதல் படம் முடிஞ்சதும் ஞானவேல்ராஜா அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்து முன்பணம் கொடுத்தார் அந்த பணத்தில் ஒரு வண்டி வாங்கிட்டு ஊரெல்லாம் சுத்த ஆரம்பிச்சிடார் அதான் படம் தாமதம் ஆகிட்டு அடுத்த படமாச்சும் ஒழுங்கா உடனே பண்ணுங்கனு அதேதான் எங்களின் எண்ணமும் சாந்த குமார் அடுத்தடுத்து படம் பண்ணிட்டே இருக்கனும்.

படத்தில் பெரிய பிளஸ் வசனங்களும் , கதை நகர்த்தலும்.

வசனங்கள் :
“பயங்கரமான பசி என்னை எல்லாத்தையும் சகிக்க வச்சிருச்சி”

“என்னபா எல்லாமே ரெட் வாங்கி இருக்க கடைசில இன்ஜினியரிங் கூட கிடைக்காம போய்ட போது ”

” இங்க தோக்கறவன் கூட ஜெயிக்கற காலம் வரும் ஆனா பாசாங்கு பண்றவன் கடைசிவரை எதுவும் பண்ண முடியாது ”

“மிருகத்துல இருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி அடைஞ்ச அப்ப பொய் , சூதும் வளர்ந்துச்சு அதனை தவிர்க்க அவனுக்குனு ஒரு இடம் தேவைப்பட்டுச்சு அதை கோவில்னு அவன் சொல்லி அங்க போய் மனசை ஒருநிலைப்படுத்தினா தீய எண்ணங்களை போய் நல்ல எண்ணங்கள் உண்டாச்சு அதான் கோவில் இப்ப புருஸ்லி சட்டை போட்டுட்டாலே புரூஸ்லி ஆக முடியாது அவர் மாதிரி சண்டை பயிற்சி பண்ணாதான் ஆக முடியும் அதேதான் பகவத்கீதை , குரான் ,பைபிள் வைச்சிட்டு இருந்தாலே கடவுளை உணர முடியாது அதில் இருக்கிறதை படிச்சி பின்பற்றினால்தான் கடவுளையே உணர முடியும் ”

இது மாதிரியான வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம் …!

படத்தின் ஒளிப்பதிவும் , பிண்ணனி இசையும் நன்று. தேவையற்ற பாடல்கள் வைக்காம இருந்ததற்கு இயக்குனருக்கு நன்றி …!

Also Read: Nerkonda Paarvai Review

காலம் மாறினாலும் சாதிய பாகுபாடுகள் இன்னும் கிராமத்து அளவில் அதிகம் இருப்பதை கதை போகும் பாதையில் சுட்டி காட்டி இருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்…!

வேகமான திரைக்கதைகளை விட்டு தமிழ் சினிமா மெல்ல வெளியே வர்றது நல்லதுதான் ஒரே மாதிரி இருக்கிறதை விட அப்ப அப்ப இப்படிபட்ட படம் வந்தால் நல்லாதான் இருக்கும்..!