Penbugs
Cinema

மகாநதி (a) Mahanati…!

மகாநதி …!

சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த பெண் என்பதால் கீர்த்திக்கு அறிமுகத்திலிருந்தே விமர்சனங்களும் , வரவேற்புக்களும் சரிசமமாக இருந்தன.

வழக்கம்போல் அறிமுக படத்தில் இருந்து வெறும் கதை போன போக்கில் வந்து டூயட் பாடும் நாயகியாகவே பரிச்சயம் ஆனார்..!

இடைப்பட்ட காலத்தில் சமூக வலைத்தளங்களில் அவரின் முக பாவனைகள் , சிரிப்புகள் என பல்வேறு காரணங்களை வைத்து முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு மிகப்பெரிய விமர்சன தாக்குதல்களையும் , உருவ கேலிகளையும் எதிர்கொண்டார்.

அப்பொழுதுதான் மகாநதி (தமிழில் நடிகையர் திலகம்) என்ற பட அறிவிப்பு வருகிறது என்னயா இது சாவித்திரி அம்மா கேரக்டரில் இந்த பெண்ணா என்று கோலிவுட் , டோலிவுட் என எல்லா வுட்டிலும் ஆச்சரியம் கலந்த சிரிப்பொலி ஏற்பட்டது.

சாதாரண பார்வையாளன் முதல் அனைவருக்கும் இந்த புள்ள என்ன அப்படி நடிச்சிட போது படத்தின் இயக்குனர் பெரிய தப்பு பண்ணிடார் என்ற பேச்சுகளே இடம்பெற்றன.

படம் வெளியான பின் ஏறக்குறைய அரை மனதோடுதான் படம் பார்க்க சென்றவர்களில் பட துவக்கத்திலிருந்து இறுதிவரை கீர்த்தி சுரேஷ் எங்கே என தேட மட்டுமே முடிந்தது ஆம் அந்த அளவிற்கு சாவித்திரியாகவே வாழ்ந்து காட்டி இருந்தது அந்த புள்ள…!

அதுவும் ஒரு கண்ணுல மட்டும் ‌கண்ணீர் வர வைக்கிறது சாவித்திரியம்மா பண்ணது நாம பார்க்கல ஆனா இந்த புள்ள எவ்ளோ அழகா அதை திரையில் கொண்டு வந்து மிரள வைச்சிடுச்சு …!

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம், கீர்த்தி சினிமா வாழ்க்கைக்கு இந்த ஒரு படமே பதம்….!

தன் மீதான விமர்சனங்களை கண்டுக்காம போறது ஒரு விதம் அந்த விமர்சனங்களை தன்னுடைய செயல்களால் விமர்சித்தவர்களையே பாராட்ட வைக்கிறதுலதான் உண்மையான வெற்றி அடங்கி இருக்கு இந்த விசயத்துல கீர்த்தி நம் அனைவருக்குமே ஒரு நல்ல வழிகாட்டி‌‌…!

தேசிய விருதிற்கு வாழ்த்துக்கள் கீர்த்தி சுரேஷ் …!