கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் கே சம்பந்தம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி (98), கொரோனா தொற்றிலிருந்து சில நாட்களுக்கு முன்னர் குணமடைந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து பல்வேறு தமிழ் மற்றும் மலையாள திரைத்துறையினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார் . அந்த பதிவில்
73ஆவது வயதில் நடிக்க வந்து 18 வருடங்களாக மலையாளிகளைச் சிரிக்கவைத்தவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. இளமை துள்ளும் தாத்தாவாகக் கலையுலகில் வளையவந்தவர். இன்னும் 2 ஆண்டுகளில் சதமடிக்கவேண்டியவர் இன்று நம்மை நீங்கியிருக்கிறார். நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.
என தனது இதயப்பூர்வமான அஞ்சலியை தெரிவித்துள்ளார்.
Toxic environment: The Ellen Show is under investigation