Penbugs
Editorial News

மனதின் குரல் நிகழ்ச்சியில் நாமக்கல் மாணவியை பாராட்டிய பிரதமர் மோடி

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் முழுமையான உரை

எனது அருமை நாட்டு மக்களே, வணக்கம். இன்று ஜூலை மாதம் 26ஆம் நாள், இன்றைய தினம் மிகவும் விசேஷம் நிறைந்தது. இன்று ‘கார்கில் விஜய் திவஸ்’, அதாவது கார்கில் யுத்தத்தில் நாம் வெற்றி பெற்றதைக் குறிக்கும் நாள் ஆகும்.

21 ஆண்டுகள் முன்பாக, இதே நாளன்று தான் கார்கில் யுத்தத்தில் நமது இராணுவமானது இந்தியாவின் வெற்றிக் கொடியை நாட்டியது. நண்பர்களே, கார்கில் போர் நடைபெற்ற போது நிலவிய சூழ்நிலையை பாரதம் என்றுமே மறவாது. பெரியபெரிய கனவுகளை மனதில் கொண்டு பாரதநாட்டு பூமியை அபகரிக்கவும், தங்கள் நாட்டில் நிலவி வந்த உள்நாட்டுப் பூசல்களிலிருந்து அவர்களது மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும் பாகிஸ்தான் இந்த வெற்று சாகஸத்தைக் கட்டவிழ்த்து விட்டது.

சமூக ஊடகத்தில் #courageinkargil என்ற ஒரு ஹேஷ்டேகிலே மக்கள் நமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள், உயிர்த்தியாகம் செய்தோருக்கு தங்கள் நினைவாஞ்சலிகளை அர்ப்பணம் செய்து வருகிறார்கள். நான் இன்று நாட்டுமக்கள் அனைவரின் தரப்பிலிருந்தும், நமது இந்த வீரர்களுடன் கூடவே, பாரத அன்னைக்கு இப்படிப்பட்ட சத்புத்திரர்களை ஈன்றளித்த தாய்மார்களுக்கும் என் வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன்.

இன்று நாள் முழுவதும் கார்கில் வெற்றியோடு இணைந்த நமது வீரர்கள் பற்றிய கதைகளை, வீரம் நிறைந்த தாய்மார்களின் தியாகத்தைப் பற்றி ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் நாட்டின் இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

www.gallantryawards.gov.in என்று ஒரு இணையதளம் இருக்கிறது, இதில் நீங்கள் ஒருமுறை நுழைந்து பாருங்கள் என்ற வேண்டுகோளையும் நான் உங்களிடம் விடுக்கிறேன். அங்கே தீரம் நிறை நமது இராணுவ வீரர்களைப் பற்றியும், அவர்களின் பராக்கிரமம் பற்றியும் ஏகப்பட்ட தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும், அந்தத் தகவல்களைப் பற்றி நீங்கள் உங்கள் நண்பர்களோடு கலந்துரையாடும் போது உத்வேகத்துக்கான ஊற்றுக்கண் உங்களுக்குள்ளே திறக்கும். கண்டிப்பாக இந்த இணையத்தளத்திற்கு நீங்கள் சென்று பாருங்கள், மீண்டும் மீண்டும் சென்று பாருங்கள் என்று தான் நான் கூறுவேன்.

மேலும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில், நாமக்கல்லை சேர்ந்த கனிகா என்ற மாணவியுடன், பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அப்போது, நாமக்கல் பற்றி கேள்விப்படும்போது எனக்கு நினைவுக்கு வருவது மிகப் பெரிய ஆஞ்சநேயர் கோயில் தான் என பிரதமர் கூறினார்.
ஆனால், தற்போது நாமக்கல் என்று சொல்லும்போது மாணவி கனிகாவின் பெயரும் நினைவுக்கு வருவதாக அவர் தெரிவித்தார். அப்போது பேசிய மாணவி கனிகா, தேர்வில் 486 மதிப்பெண்கள் மட்டுமே எடுப்பேன் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது 490 மதிப்பெண்கள் பெற்று இருப்பதாக கூறினார்.தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, மாணவி கனிகாவின் தந்தை ஓட்டுநராக பணிபுரியும் நிலையில், கனிகாவின் சகோதரி மருத்துவ படிப்பு படித்து வருவதாகவும் தெரிவித்தார்.இது போன்ற கடினமான சூழலிலும் சாதிக்கக் கூடிய ஏராளமான மாணவர்கள் நமது நாட்டில் இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, இது போன்று மற்றவர்களுக்கு முன்மாதிரியாக புத்துணர்ச்சி அளிக்க கூடிய கதைகளை அதிகளவில் மற்றவர்களுக்கு பகிரும் படி இளைஞர்களை கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் அதிகமுள்ளதையும், பிற நாடுகளை விட உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

லட்சக்கணக்கான உயிர்களைக் காக்க முடிந்துள்ளபோதும், இன்னும் கொரோனா அபாயம் நீங்கவில்லை எனத் தெரிவித்தார். பல பகுதிகளில் கொரோனா வேகமாகப் பரவுவதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Leave a Comment