மனிதம் வளர்ப்போம்!

India's Current Status

5,172
Confirmed
150
Deaths
421
Recovered

Global Current Status

1,386,807
Confirmed
79,065
Deaths
297,580
Recovered
Powered By @Sri

நான் பெண் என்பதனால் என்னை வன்புணர்வு செய்தாய்!
நான் முகமதியர் என்பதனால் என்னை கொன்றாய்!
தயவுசெய்து என்னை இந்தியனாக வாழவிடு !
என்ற பதாகைகள் உயர்திய படி குடியுரிமை சட்ட திருத்த எதிர்த்து தொடங்கியது பல போராட்டங்கள்!

இந்திய ஒன்றியம் என்பது பல்வேறு தேசிய இனங்களின் கூடம். பல்வேறு மொழிகள், பல்வேறு மதங்கள், பல்வேறு கலாச்சாரங்களில் உருவானது!!

அதுதான் இந்திய ஒன்றியத்தை பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடாக மாற்றியது! அதுதான் இந்திய ஒன்றியத்தின் அழகே!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14ஆம் உறுப்பு :

இந்திய நிலப்பரப்பிற்குள் ஒவ்வொருவருக்கும் சட்டத்தின் முன் சம நிலையையோ அல்லது சட்டங்களின் சம பாதுகாப்பையோ அரசு மறுக்கலாகாது!
ஆனால் இந்த குடியுரிமை திருத்த மசோதாவின் மூலம் அரசியமைப்பு சட்டத்தை குழிதோண்டி புதைத்து விட்டது.

வன்முறைக்கு மதம் மட்டுமே அளவுகோல் இல்லை. மதத்தின் அடிப்படையில் எந்த முடிவையும் எடுக்க இயலாது.

என்ன சொல்கிறது குடியுரிமை திருத்த சட்ட மசோதா?

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானித்தான் நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இசுலாமியர் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் போன்றவர்கள் இந்தியக் குடியுரிமை வழப்படும்!. மதத்தின் பெயரால் ஒரு மதபிளவை ஏற்படுத்தும் செயல் தான்.முகமதியரை தவிர்த்து உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், குறைந்தது 5 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆளுகிற அதிகாரத்தைத்தான் மக்கள் உங்களுக்கு வழங்கியிருக்கிறார்களே தவிர, இந்திய ஒன்றியத்தை பிளவுபடுத்தும் ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் எதிராக போராடவேண்டியது குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

போராட்டம் போராட்டம் என்றால் நாடு சுடுகாடு ஆகிவிடம்
என்பார் சிலர் ஆனால் போராடவில்லை என்றால் தான் நாடு சுடுகாடு ஆகும்.

இந்திய இறையாண்மை நிலைப்பெற்றிருக்க, சனாதனத்தை வேறருக்க, மொழிவழி தேசிய இனங்களின் உரிமைக் குரல்கள் ஓங்க வேண்டும். இந்திய ஒன்றியம் அறத்திக்கானது, அனைவருக்காமானது ! மதத்தினை ஒழித்து மனிதம் வளர்ப்போம்!