Penbugs
Cinema

மாஸ்டரின் மாஸ் ரைடு…!

லோகேஷ் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க போகிறார் என்ற செய்தி வந்தவுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்பது Experimental Category Films, ஆனால் ஒரு சில தமிழ் சினிமா ரசிகர்கள் ஈஸியாக கணித்து விடுவார்கள் பெரிய ஹீரோக்காக இயக்குநர்கள் அட்ஜஸ்ட் செய்து கமெர்சியல் மீட்டரில் தான் படத்தை இயக்குவார்கள் என்று,

இங்கு மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால் Experimental Films பண்ணிய கார்த்திக் சுப்பராஜ் ரஜினியை வைத்து பேட்ட எடுத்த போது முழுக்க முழுக்க Experimental – ஐ கைவிட்டு Fanboy Film – என்கிற கோட்பாட்டுடன் ஒரு கமெர்சியல் படத்தை கொடுத்தார்,என்ன தான் நான் ரஜினி ரசிகனாக இருந்தாலும் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு பேட்ட படத்தின் இரண்டாம் பகுதியில் துளி கூட இருக்காது,மொத்தமாக படத்தை இழுத்து மூடிய கதை தான்,

இதே போல் தான் லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படமும்,முதல் பாதி கதைக்கு மேலாக பயணம் செய்து ஒவ்வொரு கேரக்டரையும் அறிமுகம் செய்ய நேரம் எடுத்துக்கொண்டாலும் ஒரு கமெர்சியல் படத்திற்கு தேவையான சரியான நடையில் படம் சென்றது,இங்கு முதல் சறுக்கல் படத்தின் நீளம்,இரண்டாம் பாதியில் வரும் இரண்டு பாடல்களுக்கும் சில நீண்ட நேர காட்சிகளுக்கும் கத்திரி போட்டு இருந்தால் இரண்டாம் பாதி இன்னும் டைட்டாக திரைக்கதை அமைந்திருக்கும்,லோகேஷின் Experimental சண்டை காட்சிகளிலும்,விஜய் கதாபாத்திரத்தை வடிவமைத்த விதத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது,விஜய் ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் எங்கு கை தட்டுவார்கள் என்று சரியாக கணித்து லோகேஷிற்கு உதவியாக திரைக்கதை எழுதி கொடுத்த Vijay Fan Boy இயக்குநர் ரத்னகுமார் (மேயாத மான் – ஆடை) – ரும், ஜனரஞ்சகமாக எழுதிய பொன் பார்த்திபனும் இங்கு பாராட்டப்படவேண்டியவர்கள்,கொஞ்சம் இரண்டாம் பாதி திரைக்கதையை மெருகேற்றி இருக்கலாம் என்று தோணுச்சு,

ஹிட் மெட்டீரியல் பாடல்களை கொடுத்த அனிருத் பின்னணி இசையில் படத்தை முழு பக்கபலத்துடன் தாங்கி பிடித்தாலும் ஒரு டோஸ் குறைந்தது போல் ஒரு உணர்வு,கத்தியில் இருந்த வீரியம் இதில் சற்று குறைவு,

ஒவ்வொரு Frame – உம் Wallpaper மெட்டீரியலாக செதுக்கியதில் சத்யன் சூரன் மிக பெருந்தூணாக நிற்கிறார்,பிலோமின் ராஜ் அவர்களின் கத்தியால் படத்தை இன்னும் கொஞ்சம் கத்திரியிட்டு பட்டை தீட்டியிருக்கலாம்,

படத்தில் கேஸ்டிங் நிறைய பேர் இருந்தாலே பிரச்சனை தான் போல்,முதலில் இந்த Onboard கலாச்சாரத்தை துவங்கி வைத்தது யார் என்று தெரியவில்லை,ஸ்கோப் கொஞ்சம் கம்மி தான் என்றாலும் தேவைக்கான வேலையை சரியாகவே மற்ற நடிகர்களும் நடிகையும் செய்து உள்ளனர்,

இங்கு விஜய் மற்றும் லோகேஷை ஒரு காரணத்தில் பாராட்டியே ஆக வேண்டும்,
ஒரு Rivalry படத்தில் முக்கிய லீடான விஜய்யை விட விஜய் சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதப்பட்ட விதத்தில் பவானி கேரக்ட்ரின் தேவையை சரியாக வடிவமைத்து இருக்கிறார் என்றே சொல்லலாம்,எதார்த்தமாக Natural ஆக்ட்டிங்கில் விஜய் சேதுபதியை நடிக்க வைத்தால் போதும் பாதி படத்திற்கு அவரே முன் நின்று சுமைதாங்கி வேலையை பார்த்துக்கொள்வார் போல்,ஆயிரம் முத்தங்களை அவருக்கு பரிசாக கொடுக்கலாம்,

கடைசியாக நம்ம விஜய் அண்ணா,
ஆமா எனக்கு ரஜினி,அஜித் தான் பிடிக்கும்,அதுக்காக தளபதி பத்தி எழுதாம இருக்க முடியுமா நெவர்,

ஒவ்வொரு Frame – இலும் நம்ம வாத்தி
தன் அதிரடியிலும்,பேச்சிலும்,உடல் மொழியிலும்,உத்வேகத்திலும் ரசிகர்களை குஷி படுத்திக்கொண்டே இருக்கிறார்,கரகோஷ அலை தியேட்டரில் ஆர்ப்பரித்த வண்ணம் தளபதி தகதிமிதா ஆட்டம் போட்டு நம்மை அவர் பக்கம் ஈர்த்துக்கொண்டே இருக்கிறார்,தன் மீட்டரில் சரியான அளவுகோலில் எது தேவையோ அதை மட்டும் நடிப்பில் சரியாக கொடுத்து அனைவரின் நெஞ்சிலும் நீங்கா இடம் பிடிக்கிறார்,எந்நேரமும் போதையில் இருக்கும் அந்த உடல்மொழி விஜய் அண்ணாவுக்கே பொருந்தும் அழகிய Black Hot Chocolate வடிவம்,

பிறகு ஆங்காங்கே வரும் 80’s – 90’s பாடல்களும் லோகேஷின் டச்சை நமக்கு மனதில் பதிய வைத்துக்கொண்டே இருக்கிறது,

கொஞ்சம் நீளம் குறைந்த இரண்டாம் பாதி திரைக்கதையில் இருந்திருந்தால் மாஸ்டர் தனித்துவமாக கொண்டாடப்பட்டிருப்பார்,

முந்திரி போடாத சர்க்கரை பொங்கல்
போல் கொஞ்சம் சுவை குறைகிறது
ஆனால் சர்க்கரை பொங்கல் ரசிக்கும் ரகம்…!

Related posts

COVID19: Anushka Sharma-Virat Kohli donates to PM CARES Fund

Penbugs

Poster of STR and Hansika’s Maha

Penbugs

Miss India Netflix [2020] carries a stench of drama that’s fantasized in men’s world

Lakshmi Muthiah

Priya Bhavani Shankar pens emotional note for her boyfriend Rajvel on his birthday!

Penbugs

16 Vayadhinile digitally restored, will have Telugu release

Penbugs

Karthik Subbaraj to direct Vikram and Dhruv Vikram

Penbugs

Trailer of Maara is here!

Penbugs

Petition filed in Madras High Court seeking arrest of Kohli, Tamannah

Penbugs

Vijayakanth’s elder son to turn actor soon

Penbugs

Sanam Shetty lodges police complaint on Tharshan

Penbugs

COVID19: Virat-Anushka donates 5 Lakh each for Mumbai Police welfare

Penbugs

VISWASAM TRAILER, A TREAT TO AJITH FANS

Penbugs

Leave a Comment