மயில் | Mayil

ஜானி வசனம் :

என்னங்க படபடனு பேசிட்டீங்க ..!

படபட பட்டாசாக தான் பேசுவாள் ஏனெனில் அவள் பிறந்த இடம் சிவகாசி …!

தமிழ் சினிமாவில் நடிகையர்கள் ஆதிக்கம் என்பது குறிஞ்சிப்பூ மாதிரி ஒரு அதிசயமான விசயம் இங்கு ஸ்ரீதேவியும் அப்படிப்பட்ட குறிஞ்சிப்பூதான் …!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இளம் வயதிலேயே கதாநாயகியாக வளர்ந்தவர் தனக்கான பாத்திரத்தை எந்த அளவிற்கு மெருகேற்ற முடியுமோ அந்த அளவிற்கு சிறு வயதில் இருந்தே ஒரு பண்பட்ட நடிப்பையே தந்து கொண்டிருந்தார் அது மூன்று முடிச்சாகட்டும் இல்லை ஜானியாகட்டும் இந்த இரு படத்தின் இடைவெளி அதிகம் இருந்தாலும் ஸ்ரீதேவியின் நடிப்பு ஒரு பண்பட்டதாகவே காணப்படும்..!

சம கால ஜாம்பவான்களாக இருந்த ரஜினி ,கமலோடு இருபதுக்கும் மேற்பட்ட படங்கள் நடித்ததே ஸ்ரீதேவி அந்த காலத்தில் எவ்ளோ பெரிய நட்சத்திரம் என்பதற்கு உதாரணம்…!

தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என வலம் வந்து அந்தந்த மொழிகளில் சூப்பர்ஸ்டார்களோடு எல்லாம் ஜோடியாக நடித்து இந்திய அளவில் பிரபலமாக பேசப்பட்டு வந்தவர் ஸ்ரீதேவி…!

மூன்றாம் பிறை ,ஜானி , மூன்று முடிச்சு ,16 வயதினிலே, வறுமையின் நிறம் சிகப்பு என தன் நடிப்பு முத்திரையை பதித்த படங்கள் ஏராளம்..!

கால தேவன் சீக்கிரம் அழைத்து சென்றாலும் மயிலாகவும் , அர்ச்சனாவாகவும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்து இருப்பார் என்றென்றும்…!

ஸ்ரீதேவியின் பிறந்தநாள் இன்று…!