Penbugs
Editorial News

மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பிடித்த Paytm

விதிமீறல் புகார் காரணமாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட Paytm செயலி மீண்டும் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ளது.

விதிமுறை மீறல் காரணமாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Paytm செயலி நீக்கப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இது உலகம் முழுவதும் உள்ள Paytm வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த தடை தொடர்பாக தெரிவித்திருந்த Paytm நிறுவனம், தடை செய்யப்பட்ட செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் இது தொடர்பாக கூகுள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். வாடிக்கையாளர்களின் கணக்குகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் தற்காலிகமாக கூகுள் பிளே ஸ்டோரில் நீக்கப்பட்ட Paytm செயலி மீண்டும் பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள Paytm நிறுவனம், நாங்கள் திரும்பவும் வந்துவிட்டோம் என அறிவித்துள்ளது.

Related posts

டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸ், இ-ஆர்சி புக் இனி சட்டப்படி செல்லும்

Penbugs

Paytm removed from Google Playstore for violations

Penbugs

Leave a Comment