Penbugs
CoronavirusIndian Sports

மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பினார் விஸ்வநாதன் ஆனந்த்!

ஜெர்மனிக்கு பண்டீஸ்லிகா செஸ் தொடரில் விளையாட சென்றிருந்த விஸ்வநாதன் ஆனந்த் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஜெர்மனியிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் அவர் சென்றிருந்த நேரத்தில் ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கிடையேயான விமான பயணம் தடை செய்யப்பட்டும் மற்றும் மிகவும் கட்டுப்பாடுகளுடனும் இருந்தது..

Read: https://penbugs.com/covid-19-lockdown-extended-till-june-30-in-containment-zones/

தற்போது இந்தியாவில் சில ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது, இந்த நிலையில் விஸ்வநாதன் ஜெர்மனியில் இருந்து இந்தியாவிற்கு விமானத்தின் மூலம் நாடு திரும்பினார்.

இந்தியாவிற்கு திரும்பும் அவர் டெல்லி வழியாக பெங்களூருக்கு வரவுள்ளார்.

பெங்களூருவிற்கு வரும் விஸ்வநாதன் ஆனந்த் 14 நாட்கள் தனிமை படுத்த பட்ட பிறகு சென்னைக்கு வருவார்.

Related posts

Koneru Humpy returns from maternity break, wins World Rapid Chess Championship

Penbugs

India, Russia declared joint-winners at Chess Olympiad finals

Penbugs

Chess Olympiad winning Indian Team asked to pay custom duty on gold medals

Penbugs

Akash Ganesan – The Indian Chess Grandmaster

Lakshmi Muthiah

Aanand L Rai to direct Vishwanathan Anand biopic

Penbugs