முதல்வருடன் ஆலோசனைக்கு பின்னர் மருத்துவக்குழுவினரின் பேட்டி

கொரோனா பரிசோதனைகளை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளோம்

தற்போது சென்னையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது

தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது

திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா அதிகரித்து வருகிறது

சென்னையில் பின்பற்றப்படும் நோய்த் தடுப்பு முறைகளை மற்ற நகரங்களிலும் பின்பற்ற வேண்டும்

திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் கொரோனா இரட்டிப்பாகும் காலம் குறைந்துவிட்டது

காய்ச்சல், சுவை உணர்வு இன்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை அவசியம்

சென்னையில் கொரோனா அதிகமானாலும் தொற்று இரட்டிப்பாகும் காலம் அதிகரித்துள்ளது

பொதுமுடக்கத்தை பரிந்துரைக்கவில்லை

பொதுமுடக்கத்தை மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைக்கவில்லை

எப்போதும் பொது முடக்கத்தை நிரந்தரமாக்கி கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சிப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது

பொதுமுடக்கம் நோய் தொற்று இரட்டிப்பாகும் காலத்தை அதிகரித்துள்ளதை மறுக்க முடியாது

கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் பொது முடக்கத்தை தீவிரமாக்கலாம்

பொதுப்போக்குவரத்து காரணமாக சில மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகமாகியுள்ளது

பொதுப்போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளது

ராமசுப்ரமணியம், மருத்துவ நிபுணர் குழு

பொதுமுடக்கம் மூலம் கொரோனாவை ஒழிக்க முயற்சிப்பது கோடாரியை கொண்டு கொசுவை ஒழிக்க முயற்சிப்பது போன்றது

பொதுமுடக்கம் தவிர வேறு யுக்திகள் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்

பொதுமுடக்கத்தை பரிந்துரைக்கவில்லை, ஆனால் கட்டுப்பாடுகள் தொடர பரிந்துரைத்துள்ளோம்

பரிசோதனைகளை அதிகரிப்பதால் கொரோனா எண்ணிக்கை அதிகமாகும்

பரிசோதனைகளை அதிகரித்து கொரோனா நோயாளிகளை கண்டறிவதன் மூலம் இறப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும்

நாட்டிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது

கொரோனா சிகிச்சைக்கு அமெரிக்காவில் இருந்து கூட மருந்துகளை வரவழைத்துள்ளோம்

சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் கொரோனா எளிதாக பரவுகிறது

நாட்டிலேயே கொரோனா பரிசோதனை தமிழகத்தில் தான் அதிகம்

பொதுமுடக்கம் நீட்டிப்பா? கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்படுமா? என்பதை தமிழக அரசு தான் முடிவெடுக்கும்