முகக்கவசம் அணிந்தாலும் விரைவில் அடையாளம் கண்டு அன்லாக் ஆகும் புதிய வசதியை வெளியிட்டது ஆப்பிள்…!

CLICK HERE TO SEE DETAILED STATISTICS

India

Confirmed
160,310
+2,224 (24h)
Deaths
4,560
+26 (24h)
Recovered
68,713
42.86%
Active
87,037
54.29%

Worldwide

Cases
5,824,138
+39,535 (24h)
Deaths
358,178
+1,241 (24h)
Recovered
2,522,415
43.31%
Active
2,943,545
50.54%
Powered By @Sri

ஆப்பிள் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள iOS 13.5ல் பயனாளர் முகக்கவசம் அணிந்திருந்தாலும் விரைவில் அடையாளம் கண்டு திறக்கும் சிறப்பியல்பு உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் கொரோனா காலத்தில் 2 சிறப்பியல்புகளுடன் கூடிய iOS 13.5ஐ இன்று வெளியிட்டுள்ளது. இதில் பயனாளர் முகக்கவசம் அணிந்திருந்தாலும் விரைவில் முகத்தை அடையாளம் கண்டு எளிதாகத் திறக்கும் வகையில் ஆப்பிள் – கூகுள் கூட்டு முயற்சியால் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன் வந்த அப்டேட்டுகளில் முகக்கவசம் அணிந்தால் அடையாளம் கண்டு திறக்கச் சில நொடிகள் நேரம் ஆகும். இப்போது உடனடியாக முகத்தை அடையாளங் கண்டு கடவுச்சொல்லை உள்ளிடுவதற்கான தேர்வு தோன்றும். பயனாளரின் நண்பர்களில் யாருக்கேனும் கொரோனா இருந்தால், அரசால் உருவாக்கப்பட்ட செயலியைப் பயன்படுத்தும்போது அது குறித்த அறிவிக்கை வருவதற்கான வசதியும் புதிய ஐ போனின் புதிய அப்டேட்டில் உள்ளது.