Penbugs
Cricket IPL Men Cricket

Mustafizur of Tamilnadu

ஒருத்தனுக்கு வாழ்க்கையில
பல பிரச்சனைகள் இருக்கலாம்
நிறைய கஷ்டங்கள் வரலாம்,மனசு
நொந்து போய், என்னடா இது
எழவு வாழக்கைன்னு தோணுற அளவு விரக்தியோட உச்சத்துக்கு செல்லலாம்,

ரொம்ப உடைஞ்சு போய் இருக்க
நேரத்துல ஏதோ ஒரு உந்துதலால
நம்ம தவறான நேரங்களை எல்லாம்
தாண்டி எப்படியோ என்றோ எப்பவோ
நாம் செய்த புண்ணியத்தின் பயனா
திடீருனு ஒரு ஒளி பிரகாசமா அடிக்கும்
நம்மல நோக்கி,

அந்த ஒளியோட திடத்துக்கு ஏற்ப
அதோட அலைக்கதிர பிடிச்சுட்டு
அது கூட நம்மல ஒன்றிணைச்சு
பயணம் செஞ்சுறணும்,அதுக்கு
பிறகு காலம் எப்படி வேணும்னாலும்
மாறலாம்,வெற்றியோ தோல்வியோ
அவமானமோ அரவணைப்போ அது
காலம் தீர்மானிக்கும்,ஆனா அந்த
ஒளிய பிடிச்சுட்டு நம்ம எவளோ
தூரம் போறோம் அதான் மேட்டர்,

  • தங்கராசு நடராஜன் :

” Mustafizur Rahman of Tamilnadu “

சின்னப்பம்பட்டில இருந்து கிளம்புன
புயல் துபாய் பாலைவனத்துல சூழல்
ஏற்படுத்திட்டு இப்போ ஆஸ்திரேலியால
தஞ்சம் அடைய போகுது,

ஆனா இதுக்கு நடுவுல நிறைய
வலி,காயம்,அவமானம்,புறக்கணிப்பு,
காதல், ஏற்றம்,தாழ்வுன்னு ஒரு பெரிய
சொல்லப்படாத கதைகளின் ஆழம்
ரொம்ப பெருசா இருக்கு,

ஜெயபிரகாஷ்ன்னு ஒரு நல்ல மனுஷன்
கொடுத்த உந்துதல்னால உதவியால அந்த
ஒரு ஒளியோட வெளிச்சத்துல இன்னக்கி
நமக்கு பிரகாசமா மின்னுறார் நடராஜன்,

இந்திய அணிய பொறுத்தவரைக்கும்
ஜாஹீர் கானுக்கு பிறகு பெருசா
சொல்லிகும்படி யாரும் லெப்ட் ஹாண்ட்
ஃபேசர்ஸ் நமக்கு இன்னும் கிடைக்கல,

ஆனா நம்ம பக்கத்து ஊரு
பாகிஸ்தானுக்கு அக்ரம்ல இருந்து
இப்போ வரைக்கும் வாரம் வாரம்
புது ரிலீஸ் பண்ணுற மாதிரி லெப்ட்
ஹாண்ட் ஃபேசர்ஸ் புதுசு புதுசா
முளைச்சுட்டு வராங்க,அதே நேரத்துல
செம்மையா பெர்ஃபபார்மும் பண்ணுறாங்க,

ஆனா குறிஞ்சி பூ கூட பன்னிரெண்டு
வருஷத்துக்கு ஒரு முறை பூக்கும்
உங்களுக்கு சொல்லிக்குற மாதிரி
ஒரு லெப்ட் ஹாண்ட் ஃபேசர்ஸ்
கிடைச்சங்களான்னு இன்னும் கிண்டல்
மட்டும் தான் பண்ணல உலக கிரிக்கெட்
ரசிகர்கள்,இது பெரிய வருத்தம் நம்ம
அணிக்கு சொல்லப்போனா,

அப்போ தான் ஐ.பி.எல் ஏலத்துல
TNPL மூலமா உள்ள வந்த நடராஜன்
வார்னர் தலைமையிலான SRH அணியில
கலக்கிட்டு இருக்காரு,

துப்பாக்கில இருந்து வெளிவர
தோட்டா சரியா அடிச்சா எப்படி
இருக்குமோ அப்படி விழுகுது
ஒவ்வொரு யார்கரும்,பிரெட் லீ
வரைக்கும் பாராட்டு வாங்கியாச்சு,
இப்போ இந்திய அணிக்கு நெட்
பௌலரா போயாச்சு,இந்த பாதை
பற்றிய அனுபவம் நடராஜனுக்கு
தான் தெரியும் எப்படின்னு,

கெட்டியா பிடிச்சுக்கோங்க,அடுத்த
தலைமுறை உங்கள மாதிரி வரணும்னா
நீங்கதான் இங்க வழித்தடத்தை போட்டு
கொடுக்கணும்,அடுத்து இந்திய அணியின்
ப்ளெயிங் XI தான்,உள்ள போய்ட்டா சும்மா
சிறப்பான தரமான செய்கைய செஞ்சு
காட்டிருங்க நடராஜன்,

போற வழி கஷ்டம் தான்
போயிட்டா வெற்றி தான்
அப்பறம் என்ன போவோம்
ஜெயிப்போம் சார் அதான் நம்ம,

வாழ்த்துக்கள் அண்ணே : )

*

Picture: Sunrisers Hyderabad Official Page

Related posts

Stirling 131 go in vain as CP Rizwan & M Usman Twin Tons helped UAE to get the first win in 2021

Aravindhan

I would love to: AB de Villiers ready to make a come back

Penbugs

Looking back at some of Dhoni’s old tweets!

Penbugs

Being Rachel Priest

Penbugs

On this day, in 2014, India created history by defeating hosts England!

Penbugs

New Zealand vs England: BJ Watling’s honest living

Penbugs

There is something about Tahir!

Penbugs

Happy Birthday, Sir Richard Hadlee!

Penbugs

Virat Kohli reclaims No.1 Test spot

Penbugs

Used to come to Chepauk just to see Dhoni batting’ – Varun Chakravarthy

Penbugs

Mitchell Starc pulls out of T20I series against India

Penbugs

Story of Jayant Yadav | IPL

Penbugs

Leave a Comment