Penbugs
Cinema

சைக்கோ…!

ஆம். மிஷ்கின் ஒரு சைக்கோதான். எல்லோரும் கமர்சியலா எடுத்து காசு பார்த்தாலும், தனக்கென்று ஒரு பாதை வகுத்துக் கொண்டு, என் சினிமா இதுதான்… சமரசம் குறைவா செய்துக் கொண்டு, தன்னால் தமிழ் சினிமாவின் ரசிகர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்ல முடியும் என முழுமையாக நம்பிக் கொண்டு இருப்பவர்.

மிஷ்கினின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படம் நந்தலாலா. இளையராஜாவின் இசையில், மிஷ்கினின் எழுத்து மற்றும் நடிப்பில் வெளிவந்த ஆகச் சிறந்த படைப்பு …!

என் தனிப்பட்ட விருப்பத்தில், முதல் இடத்தில் இருப்பது பிசாசு. ஒரு பிசாசின் வழியாக கூட அன்பை மட்டுமே தரமுடியும் என்றால் அது மிஷ்கினின் எழுத்தால் மட்டுமே சாத்தியம். பிசாசு கதையை முதலில் தனது மகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக விவரித்துள்ளார், அப்பொழுது அவரின் மகள் அழுத அழுகைதான் படத்தின் வெற்றியை தீர்மானித்தது என்று மிஷ்கினே கூறியுள்ளார். ராதாரவி அழும் காட்சியை மிஷ்கின் அவருக்கு சொல்லிதரும் காட்சி யூடியூப்பில் இருக்கும். அதை காணும்போது கலைக்காக எத்தனை மெனக்கெடல் படுகிறார் இந்த சைக்கோ என்று தோணும். பிசாசு, பேய்படம் என்ற வகையில் பயமுறுத்தி இருக்க வேண்டும். ஆனால் அனைவரையும் அழ வைத்தது அதுதான் மிஷ்கினின் வெற்றி …!

Pisasu Making video : https://youtu.be/XVEugFwF02w

ஒரு நல்ல இயக்குனரா இருந்தால் எளிதாக நடித்திட முடியும். மிஷ்கினின் நடிப்பும் சளைத்தது அல்ல. ஓநாயும் ஆட்டுக்குட்டியில், ஓநாய் கதை சொல்லும் காட்சியும், நந்தலாலாவில் இறுதிக்காட்சியும் அவரின் நடிப்பிற்கு சான்று..!

Onayum Aatukuttiyum :

புத்தகங்கள் எந்த அளவிற்கு அதிகமாக படிக்கிறோமோ அந்த அளவிற்கு சினிமா குறித்தான பார்வையும் , அறிவும் மேம்படும் என்பதுதான் மிஷ்கினின் கருத்து. இளம் இயக்குனர்கள் நிச்சயம் கற்று கொள்ள வேண்டிய ஒன்று …!

மிஷ்கினின் பேட்டிகள் சுவாரஸ்யமான ஒன்று அவரின் சினிமா பார்வை , சமூகப் பார்வை என்று அவருக்கென்று உள்ள ஒன்றை தெளிவாக நயமாக எடுத்துரைப்பது அவரின் தனித்துவம் .

மிஷ்கினின் பேட்டி : https://youtu.be/uCyI0NAdIKo

மிஷ்கினின் டச்சிற்கு சில சீன்கள் :

1. அஞ்சாதே படத்தில் கடத்தல்காரர்கள் பெண்ணை நடு ரோட்டில் விடும் காட்சி
2.யுத்தம் செய் கிளைமேக்ஸ்
3.ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் ஓநாய் கதை சொல்லும் காட்சி
4. நந்தலாலா சீன் பை சீன்
5. பிசாசு ராதாரவி அழும் காட்சி
6. துப்பறிவாளன் சண்டைக் காட்சி
7. அஞ்சாதே குருவி இறக்கும் காட்சி

அடுத்தடுத்த படங்கள் அவரின் கடவுளாக விளங்கும் ராஜா இசையோடு பணிபுரிந்து கொண்டிருக்கிறார் அது வெற்றியடைய வாழ்த்துகள் …!

தோல்விகள் சந்தித்தாலும் என்றும் தன் பாதையில் மட்டும் செல்லும் மிஷ்கினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் …!

Related posts

சண்முக ராஜா மிஷ்கின்!

Kumaran Perumal

Psycho is Mysskin’s child and I am glad I was able to do justice to the script Says Tanvir Mir | Psycho’s Cinematographer

Lakshmi Muthiah

Mysskin’s Pisasu 2 to star Andrea Jeremiah as lead

Penbugs

In Pictures: Success Meet | Psycho Movie Team

Penbugs