நம்ம வீட்டு பிள்ளை | சிவகார்த்திகேயன்!

India's Current Status

2,567
Confirmed
72
Deaths
192
Recovered

Global Current Status

1,018,150
Confirmed
53,251
Deaths
213,224
Recovered
Powered By @Sri

சினிமாவில் நமக்கு தெரிஞ்ச பெரிய ஸ்டார்ஸ் எல்லாருமே எப்படி சினிமா உள்ள வந்தாங்க அதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தாங்கன்னு நமக்கு அவங்க சொன்னது மூலாமாதான் தெரிய வரும். ஆனா நம்ம பையன் ஒருத்தன் நம்ம கண்ணு முன்னாடி வளர்ந்துட்டே போறது மாதிரி சிவாவோட இந்த வளர்ச்சி நமக்கு கண்கூடா பார்த்த ஒன்னு.

அப்பா இல்லாம எம்பிஏ முடிச்சிட்டு சென்னை வந்து ஒரு காமெடி ஷோ ல கலந்து ஜெயிச்சிருக்கிறார். அதுவரை அவரே கூட நம்பிருக்க முடியாத அவரோட வாழ்க்கையோட முக்கியமான இடம் அதான். அதே டிவில தொகுப்பாளரா நின்னு அங்க அந்த வேல மட்டும் பண்ணாம எல்லா விதத்துலயும் தன்னோட திறமைய பதிவு பண்ணிட்டு இருந்த சிவாவ வெள்ளித்திரை கொஞ்சம் சீக்கிரமாவே இழுத்துக்கிட்டதுனு சொல்லலாம். சின்னத்திரைல இருந்து வந்தவங்க பெருசா வெள்ளித்திரையில் நிலைக்க மாட்டாங்கன்ற ஒரு எண்ணத்த உடைச்சது சிவாதான்

தனுஷோட உதவியோட மூனு படத்துல சின்ன ரோல் பண்றார். அப்பறம் அப்டியே ஹுரோவா நின்னார். மேடை நிகழ்ச்சிகள்ல நடிகர்கள் குரல பேசி காமிச்சிட்டு இருந்த சிவா இப்ப தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரம்.

இளையதளபதி விஜய் ஒரு மேடையில் இவரு குழந்தைங்கள பிடிச்சிட்டார்னு சொல்லுவார் பெரிய இடத்துல இருக்க ஒரு நட்சத்திரம் இத சொல்ற அளவுக்கு சிவா வளர்ந்துருக்கார்.

விஜய்டிவில சின்ன தொகுப்பாளரா தொடங்கின அவர் அதே சேனல்ல சிறந்த என்டர்டெய்னர் விருது வாங்கினார்.

இப்பவரை இருபது படங்களுக்கு மேல மத்த நட்சத்திரங்களுக்கு கிடைச்ச சில அங்கீகாரங்களும் பெயர்களும் இப்ப நாலைந்து படங்கள்லயே சிவாக்கு கிடைச்சது. சில சறுக்கல்கள் இருந்தாலும் கதை தேர்வுல கவனம் வச்சா சிவாவோட வளர்ச்சி மத்த எல்லாருக்கும் கொஞ்சம் பயத்தை கொடுக்கவே செய்யும்.

தான் வளர்ந்ததுக்கப்புறமும் நண்பனுக்காக படம் தயாரிச்சது பாராட்ட பட வேண்டிய விஷயம்.

கண்முன்னே வளர்ந்து நிக்கிற நம்ம வீட்டுப்பிள்ளைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️