Penbugs
Politics

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறும் மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றம்

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து முக ஸ்டாலின் பேசியது

நீட் ஒரு நடுநிலையான தேர்வு முறை அல்ல என்பது நீதிபதி ஏகே. ராஜன் குழு அறிக்கை மூலம் தெளிவாகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் நீட் தேர்வு சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களின் நம்பிக்கை, கனவை தகர்த்துள்ளது. கட்டாயமாக எதிர்கொல்ளும் கூடுதல் தேர்வானது சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்புப் பயிற்சி பெறக் கூடியவர்கள், பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், அதிக சமுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கவே நீட் தேர்வு. பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் போன்ற சமூகத்தினருக்கு நீட் தேர்வு எதிரானது என நீதிபதி ராஜன் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது. அது போல் பாமக எம்எல்ஏ ஜி.கே. மணி, மதிமுக உறுப்பினர் சதன் திருமலைக்குமார், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தந்து வரவேற்று பேசினர்.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது. இதையடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் நீட் விலக்கு மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இந்த மசோதாவுக்கு ஆதரவு தந்த கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்

Related posts

மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

Penbugs

மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை

Penbugs

நீட் தேர்வு தேதி அறிவிப்பு

Penbugs

நாடு முழுவதும் செப்-ல் கல்வியாண்டு : யூ.ஜி.சி. பரிந்துரை!

Penbugs

உள் ஒதுக்கீடு மசோதாக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா

Penbugs

அரசு பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Penbugs

TN plans ordinance for 10% reservation for Govt. school students in NEET

Penbugs

TN Governor gives his assent to 7.5% NEET Quota Bill

Penbugs

Timeline of Former CM J Jayalalithaa’s letter to PM against NEET

Penbugs

JEE and NEET entrance exams to be scheduled in July 2020

Penbugs

I lost a year: Student travels more than 700 kms, misses NEET exam by 10 minutes

Penbugs

Greta Thunberg supports the demand to postponed NEET, JEE during COVID19

Penbugs

Leave a Comment