Penbugs
Editorial News

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு முடிவு – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு பற்றிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்

ஆன்லைன் ரம்மியால் பலர் தற்கொலைக்கு உள்ளாகி இருக்கின்றனர். அரசு இதை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. மதுரை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நடைபெறுகின்றது.

மக்களின் கருத்துகள் அடிப்படையில் இதை தடை செய்வது குறித்து பரீசிலித்து வருகின்றோம்.

இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிப்பதுடன், அவர்கள் உயிரை போக்கி கொள்ளும் நிலைக்கு தள்ளபடுகின்றது

எனவேஆன்லைன் ரம்மியை தடை செய்ய இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்

பொது மக்களின் நலன் கருதி அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையும் தடை செய்யவும் , இதை நடத்துவர்களை கைது செய்யவும் இந்த அரசு உரிய சட்ட திருத்தம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Related posts

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு அதிரடி தடை: அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

Penbugs

Leave a Comment