Penbugs
Editorial News

ஊர்ப் பெயர்கள் மாற்றம் அரசாணை திரும்ப பெறப்பட்டது …!

தமிழகத்தில் ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் எழுதுவது பற்றி வெளியிடப்பட்ட அரசாணை திரும்பப் பெறப்பட்டதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1,018 ஊர்களின் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அறிவுறுத்தி தமிழக அரசு கடந்த 11-ஆம் தேதி அரசாணை பிறப்பித்திருந்தது. ஆனால், பல்வேறு ஊர்களின் பெயர் மாற்றத்துக்கு மக்கள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்த நிலையில், இந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அனைத்து தரப்பினரின் கருத்துகளைக் கேட்டபிறகு விரைவில் புதிய அரசாணை வெளியிடப்படும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தமிழகம் முழுவதும் Friends of Police அமைப்புக்கு தடை

Penbugs

சாத்தான்குளம் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு அரசு பணி

Penbugs

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில், காவலர் முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி

Penbugs

ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரிக்கலாம்

Kesavan Madumathy

Police ask RJ Suchi to take down video about Fenix-Jayaraj custodial death

Penbugs