Penbugs
Cinema

ஒத்த செருப்பு சைஸ் 7 | Review

இரா.பார்த்திபன், தன் கதையாலும், தன் நடிப்பாலும் நம்மை எப்போதும் வியக்க வைக்கும் கலைஞன். முதலில் இப்படி ஒரு படம் எடுக்க முன் வந்ததற்கு நன்றிகளும் வணக்கங்களும்..! இதுவரை இவர் இயக்கிய, நடித்த படங்களில் இருந்து முழுவதும் மாறுபட்ட கதைக்களத்தை ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தில் உருவாக்கியுள்ளார்..!

படம் தொடங்கும் முன் எல்லாருக்கும் ஒரு கேள்வி இருக்கும்..
எப்படி ஒரு ஆள் மட்டும் நடித்து இருக்க முடியும் போர் அடித்து விடாதா?? என்று…

Read: Theri Nayagan

ஆனால் அதையெல்லாம் தவிடு பொடியாக்கியிருப்பார் நம் கதையின் நாயகன் பார்த்திபன்..!

படத்தில் மாசிலாமணி எனும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் என்பதை விட படத்தில் “மாசு இல்லா மணியாக மாசாக வாழ்ந்து காட்டியுள்ளார்” என்பதே மிகை..!

ஒரு சராசரியான குடும்பத்தில் மற்றும் சமூகத்தில் ஏற்படும் அவலங்கலையும் அதனால் வரும் துன்பங்களையும் அவர் விழிகளால் நமக்கு படம் பிடித்து காட்டியுள்ளார்…

Read: Mahendran..!

தனக்கென இருக்கும் வஞ்சபுகழ்ச்சி பாணியில் எல்லோரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்…

படத்தில் ஒரே ஆள் தான் என்றாலும்.. படத்தில் இருக்கும் அசையா பொருட்களுக்கும் அவர் மதிப்பு கொடுத்து இருப்பது படத்தின் உயிரோட்டம்…! எடுத்து கட்டாக… கேமரா.. தண்ணீர் பாட்டல்.. பொம்மை.. கண்ணாடி.. காத்தாடி.. பொருட்கள் அனைத்திலும் ஒரு வித உயிரோட்டம் கலந்திருக்கும்…

Read: Kaapaan Review

படத்தின் கூடுதல் பலம் ஒளிப்பதிவு இராம்கி… இதில் அவர் வைத்த ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு அர்த்தங்கள் இருந்தது…!

Read: Mahamuni Review

சத்யாவின் பின்னணி இசை படத்தில் நம்மை இருக்கையில் இருக்கையயும் கட்டி போடும் அளவிற்கு இருந்தது..
ஒரே அறையில் தான் கதை என்றாலும் நம்மை பல்வேறு தளங்களில் சிந்திக்க வைத்துள்ளார் இயக்குனர்..

Read: Gang Leader Review

மொத்தத்தில் படம் முழுவதும் “ஒத்த செருப்பாக இருந்து எல்லா கதாபாத்திரங்களையும் மாசிலாமணி மீது சுமந்து சென்றிருப்பது படத்தின் ஆச்சர்யம்”

ஒத்த செருப்பு சைஸ் 7 படம் பல அங்கீகாரங்களையும் பல வெற்றிகளையும் பெற வாழ்த்துகள்..!