Penbugs
Editorial News

பாதுகாப்பு காரணமாக ராணுவ வீரர்கள் 89 செயலிகளை நீக்க அறிவுறுத்தல்

தங்களது ஸ்மார்ட்போன்களில் உள்ள ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்-டாக் உள்ளிட்ட 89 மொபைல் அப்ளிகேஷன்களை நீக்க வீரர்களுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தல்.

கடந்த வாரம் மத்திய அரசு Tik Tok, Helo, UC Browser, Likee, Cam scanner உள்ளிட்ட 59 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்தது .

பொதுமக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு கருதியும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு அச்சுறுத்தும் வகையில் இருப்பதால் தடை விதிப்பதாக அந்த தடை உத்தரவில் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று பாதுகாப்பு நலன் கருதி ராணுவ வீரர்கள் தங்களின் ஸ்மார்ட் போன்களிலிருந்து இந்த செயலிகளை நீக்குமாறு இந்திய ராணுவம் அறிவுறுத்தி உள்ளது .

இந்த 89 செயலிகளை ராணுவத்தினர், மற்றும் ஆயுதப்படையினர் தங்களது ஸ்மார்ட் போன்களில் இருந்து வரும் ஜூலை 15ம் தேதியிலிருந்து நீக்கிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த செய்திக்குறிப்பில் பரவலாக பயன்படுத்தப்படும் பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் , பப்ஜி செயலிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Facebook apologizes as Instagram goes down once again

Penbugs

“India’s attack on China”: PM Modi quits China’s Social Media App Weibo

Penbugs

Leave a Comment