Penbugs
Cinema

பரியேறும் பெருமாள்..!

பரியேறும் பெருமாள் வெளிவந்த நாள் இன்று..!

சாதிய தீண்டாமையையும் , நடைமுறை வாழ்க்கையில் உள்ள சாதிய முரண்களையும் பேசிய படம்.

“இப்பலாம் யார் சார் சாதி பாக்கிறாங்க” என்று சாதரணமாக விவாதிக்க கூட முன்வராத ஒரு விசயத்தை கிட்டதட்ட உண்மைக்கு மிக அருகில் மாரி செல்வராஜின் எழுத்து சமுதாயத்திற்கு ஒரு கேள்வியையும் எழுப்பியது …!

பரியேறும் பெருமாளின் கேள்வி நியாயமானதுதான்

” இங்க நீங்க நீங்களா இருக்கிற வரைக்கும் நான் நாயா இருக்கனும் நினைக்கிற வரைக்கும் இங்க எதுவுமே மாறாது ”

எனக்கு படத்தில் வியந்த விசயம் ஆனந்தன் கேரக்டர் மேல்தட்டை (சோகால்ட்) சேர்ந்த ஒரு ஆளாக காட்டினாலும் நண்பனுக்காக கூட இருக்கும் ஒரு கேரக்டர் நடைமுறை வாழ்க்கையிலும் பல ஆனந்தன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன அவர்களை சுற்றி இருக்கும் சமூக அமைப்பு ஏதாவது ஒரு இடத்தில் அவர்களை தன் வசம் இழுத்து விட சந்தர்ப்பம் பாத்து கொண்டிருப்பதுதான் இங்கு சிக்கல் ..!

வெறும் சாதியை காரணம் காட்டி அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது யார் செய்தாலும் ஏற்க முடியாத ஒன்று. பரியேறும் பெருமாள்கள் வெற்றி பெற ஆனந்தன்களும் வேண்டும்….!

‘ஜோ’க்களை விட ‘ஆனந்தன்’கள்தான் சமுதாயத்திற்கு தற்போது தேவை …!