Penbugs
CinemaInspiring

பிறந்தநாள் வாழ்த்துகள் அனுராக் காஷ்யப்!

தொண்ணூறுகளின் தொடங்கத்தில் டெல்லியிலிருந்து மும்பைக்கு சினிமா கனவோடு வந்து சம்பளமில்லாமலும், குறைவான ஊதியத்திற்கும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் எழுத ஆரம்பித்தவர், தற்போது மாற்று சினிமா எடுக்க முயற்சிக்கும் பலருக்கு முன்மாதிரியாகவும் இருந்து கொண்டு இருப்பவர், இயக்குனர் அனுராக் காஷ்யப்.

வசனகர்த்தாவாக ராம்கோபால் வர்மாவின் படங்களுக்கும், ஷங்கரின் முதல்வனின் இந்தி ரீமேக்கான “நாயக்” போன்ற படங்களில் பணியாற்றி பின் இயக்குனராக சினிமா வாழ்க்கையை தொடங்குகிறார்.

சிறந்த படங்களை எடுத்தது மட்டுமல்லாது,
வெவ்வேறு இந்திய மொழிகளிலும் வெளியாகும் சிறந்த படங்களை ஊக்குவிப்பதிலும், அதை உலகம் முழுவதும் உள்ள சினிமா சார்ந்த விருது விழாக்களுக்கு அனுப்புவதற்கு துணை புரிந்து வருபவர்.

இயக்குனர் பாலாவின் சில படங்களை வட இந்தியாவில் வெளியிட்டதும், விசாரணை போன்ற படங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றது என சக படைப்பாளிகளுக்கான அங்கீகாரத்தை பெற வழிசெய்து வருபவர்.

இவருடைய படங்களின் உருவாக்கம் வழக்கமான முறையிலிருந்து பெரிதும் மாறுபட்டது. உதாரணமாக காட்டில் ஒரு விலங்கை படம் பிடிக்கும் புகைப்பட கலைஞரின் போன்றது என்று அவரே குறிப்பிட்டு இருக்கிறார்.
மும்பை போன்ற பெருநகரங்களில் தன்னுடைய நடிகர்களை காட்சிக்கு ஏற்றவாறு நடிக்க சொல்லி, அதை தூரத்தில் இருந்து படம்பிடித்து இருப்பதெல்லாம் அசாத்தியத்திற்கு அருகாமையில் இருக்கும் விஷயங்கள்.

குறைந்த பட்ஜெட், வெறும் iphone ல் மட்டுமே எடுக்கப்பட்ட காட்சிகள் என இந்திய சினிமாவுக்கான இலக்கணங்களை தன் தேவைக்கேற்ப உடைத்து, அதன் எல்லைகளை விஸ்தரித்தவர்களுள் முக்கியமான நபர்.

“பாம்பே வெல்வட்” படத்தின் பெரும் தோல்விக்கு, பொருளாதார நஷ்டத்திற்கும் பிறகு துவண்டு போனவர், அதன் பிறகு சிறிய பட்ஜெட்டில் “ராமன்-ராகவ்” என்ற படத்தை எடுத்து மீண்டும் தன் இடத்தை சினிமாவில் தக்கவைத்துக்கொண்டவர்.

நவாசுதின் சித்திக் போன்ற ஆக சிறந்த நடிகனை அடையாளம் கண்டு தன் படங்களில் வாய்ப்பு தந்தது முதல் netflix போன்ற OTT தளங்களில் தடம் பதித்து இந்தியா சினிமாவின் கட்டமைப்புகளை மாற்றியமைத்தது எல்லாம் அனுராக் காஷ்யப் செய்த சிறப்பான சம்பவங்கள்.

குடும்பம், அதிகாரம் மட்டுமே கோலோச்சி இருக்கும்
இந்தி சினிமாவில் மாற்றாக இருப்பதற்கே காலம் கடந்தும் போற்றி கொண்டு இருக்கலாம்.

வெவ்வேறு கதைகளங்களை கையாள்வதும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் யுக்தியும் நன்கே கற்றறிந்தவர். அதிகார வர்க்கத்திற்கு எதிராக தன்னுடைய அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக சமூக வலைதளங்களில் பேசி அதற்காக பல இன்னல்களை சந்தித்தவர்.

அனுராக்கின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில், அவருடைய படங்களின் உருவாக்கத்தில் தோளுக்கு தோள் நின்று பக்கபலமாக இருந்தவர் ஒளிப்பதிவாளர் நட்டி, அவர் அனுராக் காஷ்யப்பை பற்றி ஒரு மேடையில் குறிப்பிட்டதையே இங்கேயும் பதிவிடுறேன்.

“அனுராக் காஷ்யப் நிறைய பேருக்கு eye opener.
He is the best,
There is only one anurag,
Please celebrate him”

இந்தியாவின் மாற்று சினிமாக்களுக்கு பெரும்பாதை அமைத்து கொண்டு இருக்கும் அனுராக் காஷ்யப்பிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Related posts

Kalki Koechlin welcomes baby girl with Guy Hershberg

Penbugs

Leave a Comment