Penbugs
Coronavirus

பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டது ரஷ்யாவின் ஸ்புட்னிக் -V தடுப்பூசி

கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கி விட்டதாக கடந்த ஆகஸ்ட் 11 அம் தேதி, முதல் நாடாக ரஷ்யா அறிவித்தது.

மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தியதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின்.

எனினும் ரஷ்ய தடுப்பூசியின் செயல் திறன் பற்றி நிபுணர்களும் , உலக சுகாதார நிறுவன ஆய்வாளர்களும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், ‘ஸ்புட்னிக்-v தடுப்பூசி பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டதாக ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கோவிட் 19-க்கு எதிரான தடுப்பூசியான ஸ்புட்னிக் -V வின் முதல் தொகுப்பு சிவில் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.

தேவையான தகுதிச் சோதனைகளுக்குப் பிறகு இந்த தடுப்பூசி வெளியிடப்பட்டுள்ளதாகவும், மண்டலவாரியான விநியோகம் விரைவில் துவங்கும் எனவும் ரஷ்ய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது

Leave a Comment