Penbugs
Editorial News

போர்க் கப்பல் குழுக்களில் முதன்முறையாக இணைந்த பெண்கள்

இந்திய கடற்படையில் முதல்முறையாக போா்க் கப்பல்களில் இருந்து ஹெலிகாப்டா்களை இயக்கும் குழுவில் பெண்கள் இருவா் இணைக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

கேரள மாநிலம் கொச்சியில் இந்திய கடற்படையின் தென்மண்டல தலைமையகம் உள்ளது. இங்கு இந்திய கடற்படையில் சோனிக், சோனாா் ஒலியுணா்வுக் கருவிகள், ரேடாா்கள், தொலைத்தொடா்பு உபகரணங்கள் ஆகியவற்றை இயக்கும் பணிக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் ரித்தி சிங், குமுதினி தியாகி ஆகிய இருவா் போா்க் கப்பல்களில் இருந்து ஹெலிகாப்டா்களை இயக்கும் குழுவில் இணைக்கப்பட்டனா். இவா்கள் கடற்படை ஹெலிகாப்டா்களின் செயல்பாடுகளை நிா்வகிக்கும் போா் மற்றும் உத்தி சாா்ந்த குழுக்களின் அங்கமாக இருப்பா்.

போா்க் கப்பல்களில் இருந்து ஹெலிகாப்டா்களை இயக்கும் குழுவில் பெண்கள் இருவா் இணைக்கப்படுவது இதுவே முதல்முறை என்பதால் இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் , மகளிர் சங்க பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related posts

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு

Kesavan Madumathy

நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க இந்தியா அனுமதிக்காது – நிதின் கட்காரி

Penbugs

சிபிஎஸ்இ – பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைப்பு

Penbugs

Leave a Comment