Penbugs
CricketMen Cricket

பிரதமர்மோடிக்கு எதிரான அப்ரிடியின் பேச்சு: இந்திய கிரிக்கெட் வீரர்கள் பதிலடி

பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பதிலடி தந்துள்ளார்கள்.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சென்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி, உலகமே கொரோனா வைரஸ் என்கிற கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதைவிட மோசமானது மோடியின் மனமும் இதயமும். காஷ்மீரில் 7 லட்சம் ராணுவத்தினரை மோடி பணியில் அமர்த்தியுள்ளார் என்று பேசினார்.

அப்ரிடியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளார்கள்.

முன்னாள் வீரர் கம்பீர் கூறியதாவது:

சிலருக்கு வயது ஆகிறதே தவிர மனத்தளவில் வளர்ச்சி அடைவதில்லை. 16 வயது நபர் போல அப்ரிடி பேசுகிறார். ஏழைகளுக்கு உணவு கொடுக்கச் சென்றுவிட்டு இப்படிப் பேசலாமா? உங்கள் நாட்டின் நிலைமை என்ன? உங்களிடம் பணம் இல்லை, மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் பேசினால் அப்ரிடியை யாரும் மதிக்க மாட்டார்கள் என்றார்.

இந்திய முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் கூறியதாவது:

மோடிக்கு எதிரான அப்ரிடியின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மனிதநேய அடிப்படையில் அவருடைய முயற்சிக்கு உதவச் சொன்னேன். இனி ஒருபோதும் அவருக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்றார்.

இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கும் யுவ்ராஜ் சிங்கின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். நம் நாட்டைப் பற்றியும் பிரதமர் பற்றியும் அப்ரிடி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மனிதநேய அடிப்படையில் தான் அப்ரிடிக்கு உதவினேன். இனி ஒருபோதும் அப்ரிடிக்கு ஆதரவு கிடையாது என்று கூறியுள்ளார்.

முன்னணி வீரர் ஷிகர் தவன் கூறியதாவது: உலகமே கரோனாவுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும்போது காஷ்மீர் பற்றி பேசுகிறீர்கள். காஷ்மீர் எப்போதும் எங்களுடையதுதான் என்று பதிலடி தந்துள்ளார்.

Related posts

லடாக்கில் திருக்குறள் கூறி மோடி அசத்தல்

Penbugs

ரம்ஜான் வாழ்த்துகள்: கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்: பிரதமர் மோடி…!

Penbugs

மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை – பிரதமர் மோடி…!

Penbugs

ம.பி.யில் 750 மெகாவாட் சூரிய மின்திட்டம் – பிரதமர் மோடி நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கிறார்

Penbugs

பொருளாதாரத்தை மீட்க நரேந்திர மோடி மாநில அரசுகளை வலியுறுத்தல்

Penbugs

புதிய கல்விக் கொள்கையில் எந்தவித பாகுபாடும் கிடையாது : பிரதமர் மோடி

Penbugs

புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு

Penbugs

புதிய கல்வி கொள்கை ; இன்று கருத்து கேட்பு

Penbugs

பிரதமா் மோடியின் இல்லத்தில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

Penbugs

பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

Penbugs

பிரதமர் நரேந்திர மோடி லடாக்கில் திடீர் ஆய்வு

Penbugs

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை

Penbugs