Penbugs
Cinema

சூப்பர்ஸ்டார்…!

சூப்பர்ஸ்டார்….!

இதை விட வேறு தலைப்பு அவருக்கு வைக்க முடியாது ஏன்னா எப்பவும் அவர் ஒருத்தர் மட்டும்தான் சூப்பர்ஸ்டார்…!

ரஜினி வருவதற்கு  முன்னர் தமிழ் படத்தில் கதாநாயகன்  ஆக வேண்டும் எனில் பெரும்பாலும் வெள்ளையா இருந்தா தான் நடிக்கவே அழைப்பார்கள் அதை உடைத்து  தமிழ் சினிமாவில் தடம் பதித்து இன்று வரைக்கும் சூப்பர் ஸ்டாரா இருந்துட்டு வர்றது  அவருடைய உழைப்பின் அளவை காட்டுகிறது…!

சூப்பர்ஸ்டார் ஒரு படத்தை நடிக்க ஒத்து கொள்வதற்கு முன் பல முறை யோசிப்பார். கதையை முழுவதும் படித்து எந்த இடத்தில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் எந்த இடத்தில் ரசிகர்கள் சோர்ந்து போவார்கள் என்று ரசிகரின் மனநிலையில் இருந்து முழுவதும் ஆராய்ந்த பின்னர்தான் கதையை தேர்வு செய்வாராம் அவ்வாறு ஒரு கதையை தேர்ந்தெடுத்து விட்டால் அதன் பிறகு இயக்குனர் என்ன சொன்னாலும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் முதல் நாள் முதல் இறுதிவரை அதே அர்ப்பணிப்போடு நடித்து தருவார் அதுதான் அவரை இந்த அளவிற்கு உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது ..!

ரஜினி என்ற பிராண்ட் தமிழ் சினிமாவை வர்த்தக ரீதியா உலக சந்தைக்கு எடுத்து சென்றது ..!

எல்லாருக்குமே ஒரு கேள்வி இருக்கும் எப்படி சினிமாவே தெரியாத சின்ன குழந்தைக்கு கூட பாத்த உடனே இவரை பிடிக்குது ஏன்னா குழந்தைகளுக்கு கதையோ , வசனமோ முக்கியம் இல்லை அதை தாண்டி ஒரு மேனரிசம் ,ஈர்ப்பு வேணும் அது அவர்கிட்ட அதிகமாகவே இருக்கு..!

இப்ப யாருக்கு வேணா ரசிகரா இருக்கலாம் ஆனா கண்டிப்பா பால்யத்தில் முதல் ஈர்ப்பு ரஜினிதான் !!!

பால்யத்தில் சினிமா பார்க்க ஆரம்பிக்காத காலத்தில் கூட இவர் சுலபமாக நமக்குள்ள வருவார் எப்படினா பெரும்பான்மையான முடி திருத்தகங்களில் இவர் போட்டோ தான் இருக்கும் அதுவும் கீழே இருக்கிற இந்த போட்டோ நான் பார்க்காத கடைகள் ரொம்ப குறைவு ???

தொண்ணூறுகளில் பிறந்த மக்கள் எல்லாருமே ரஜினியை பெரிய மாஸ் ஹீரோவாகவே பார்த்து பழகிட்டோம் எது பண்ணாலும் அதுல ஒரு ஸ்டைல் நமக்கு புடிச்சிடும் …!

எனக்கு தெரிஞ்சி அப்ப ஷு போட்டு முதன் முதல்ல நடக்க ஆரம்பிச்ச எல்லாருக்கும் பாட்ஷா பேக்ரவுண்ட் கண்டிப்பா கேட்டு இருக்கும் ..!

முத்து ஓபனிங் சாங் ஜம்ப் , கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீ தான் அதுக்கு எஜமானன் இந்த லைன்ல வரும் சின்ன புன்னகைனு வியந்து பார்த்த நாட்கள் உண்டு !

வீட்டுல யாருமே ரஜினி பேன் இல்லாததால் நான் முதன்முதலில் தியேட்டரில் பார்த்த ரஜினி படம் பாபா தான் . ஏதோ ஒரு மாயஜால காட்சிக்கு போன மாதிரி ஒரு உணர்வு என்ன பண்ணாலும் கைதட்றாங்க ரசிக்கிறாங்கனு படம் பாக்காம மக்களின் கொண்டாட்டத்தை பாத்துட்டு வந்தேன் …!

நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமில்லாத ஒன்றை திரையில் யார் வேணா செய்யலாம் ஆனா சில பேர் செஞ்சாத்தான் ரசிக்க முடியும் ரஜினி பண்ணா அங்க இயற்பியல் விதியை யாரும் பாக்க மாட்டோம் ஏன்னா பண்றது ரஜினி ..!

சூப்பர்ஸ்டார் நமக்கு உணர்த்தும் பாடங்கள் :

  1. எது இந்த உலகம் நம்ம கிட்ட குறையா சொல்லுதோ அதை வைச்சியே வாழ்க்கையில் முன்னேறு.
  2. ஒரு விசயத்துல இறங்கிட்டா எப்பவுமே ஒரு சாதாரண ஆளின் மனநிலையில் இருந்துதான் யோசிக்கனும்.
  3. அர்ப்பணிப்பு என்பது எல்லா வேலையிலும் முக்கியம் அது சரியா இருந்தா கண்டிப்பா வெற்றி வரும்.
  4. எவ்ளோ உயரத்திற்கு போனாலும் தொழில் மேல பயம் இருக்கனும்.
  5. தோல்வியில் இருக்கும் அமைதி வெற்றி வரும்போதும் இருக்கனும்.

சினிமா பற்றி தெரிய ஆரம்பிச்ச அப்பறம்தான் தெரிஞ்சது நாம எல்லாரும் ஒரு பெரிய நடிகனை திசைத்திருப்பி வைச்சிருக்கோம்….!

எல்லாருக்கும் சூப்பர் ஸ்டாரா இருக்கிற ரஜினியை பிடிக்கலாம் ஆனா ஏதோ ஒரு மூலையில் அவங்களும் நடிகர் ரஜினியை கண்டிப்பாக மிஸ் பண்ணுவாங்க ..!

கருப்புல ரசிக்க ஆரம்பிச்சு கலரில் ரசிச்சு இப்ப முப்பரிமாணம் வரை தொடர்ந்து ரசிச்சிட்டேதான் இருக்கோம் ஏன்னா அது ரஜினி…!