Penbugs
Editorial NewsEditorial News

ரயில்களில் இரவு நேரங்களில் செல்போன், லேப்டாப் சார்ஜ் போடத் தடை

ரயிலில் தீ விபத்தை தடுக்கும் விதமாக இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பயணிகள் மொபைல் சார்ஜ் செய்ய அனுமதி இல்லை என ரயில்வே அறிவித்துள்ளது.

இதற்காக, குறிப்பிட்ட 6 மணி நேரத்தில், பிளக் பாயிண்டில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கு ரயில்வேயில் ஏற்கனவே இந்த திட்டத்தை, அமல்படுத்தும் பணி தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் கூறுகையில், “ரயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி தீ விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கையாக இரவு நேரங்களில் ரயில் பெட்டிகளில் செல்போன் சார்ஜ் செய்யும் பிளக் பாயிண்ட்களுக்கு மின் இணைப்பை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. இதைக் கடந்த 16-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளோம் என‌ கூறியுள்ளார்.

Related posts

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

Penbugs

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வுகள் ; உயர்கல்வித்துறை அறிவிப்பு

Penbugs

வாட்ஸ்அப் மூலமும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறலாம்: புதிய வசதி அறிமுகம்

Penbugs

Leave a Comment