ராக்ஸ்டார்…!

காலம் மாற மாற எந்த துறையாக இருந்தாலும் ஒருவரின் வருகை ஒரு அலையை ஏற்படுத்தும் தமிழ் சினிமாவில் அனிருத்தின் வருகை அலை இல்லாமல் ஒரு பெரிய சுனாமியையே ஏற்படுத்தியது ஒய்திஸ் கொலவெறியின் கொலவெறி ஹிட் உலகமே திரும்பி பார்த்த ஒன்று ‌‌..!

ஆனால் தன் முதல் படமான “3” பல மெல்லிய மெலடிகளையும் தந்து தனது வருகையை அறிவித்தார் ஒரு இசையமைப்பாளன் மெலடியை சரியாக கையாண்டால் போதும் மற்ற இசையெல்லாம் சர்வ சாதரணமாக வரும் என்ற கூற்றிற்கு அனிருத் ஒரு உதாரணம்..!

முதல் படத்தில் வெற்றி என்பது பெரிய விசயம் இல்லை ஆனால் அந்த வெற்றியை தக்க வைத்து கொள்வதில் இருப்பதுதான் திறமை அனிருத்தின் முதல் படத்தில் இருந்து தற்போது வரை ஒவ்வொரு ஆல்பமும் சென்சேசன்தான் …!

ஆரம்ப காலத்தில் அனிருத்தின் ஆல்பத்தில் என்னடா இந்த ஆளே எல்லா பாட்டும் பாடிட்டு இருக்கான் என்று தோன்றியது போக இப்பொழுது மற்ற பாடகர்கள் பாடிய பாட்டை என்னடா அனிருத்தின் குரலில் இந்த பாட்டு இருக்கலாமே என்று தோணும் அளவிற்கு ஒரு‌ மதிமயக்கும் குரலுக்கு சொந்தக்காரராக விளங்குகிறார்…!

எனக்கு பெர்சனலா பிடிச்சது singer அனிருத். உருவத்துக்கும் குரலுக்கும் பொருந்தாத ஒரு ஆளு. such a maturity he has gotten in his voice. “வேலையில்லா பட்டதாரி”ன்னு கத்தி ஊர கூப்பிட்றதா இருக்கட்டும், “உயிரே உன் உயிரென நானிருப்பேன்”ன்னு கொஞ்சுறதா இருக்கட்டும் அனிருத் காட்ற variation செம்ம.

சக இசையமைப்பாளர்களில் ரகுமான், யுவன்சங்கர் ராஜா ,இமான், ஷான்ரோல்டன், சந்தோஷ் நாராயணன், ஸ்ரீகாந்த் தேவா , தமன் என அனைவருக்கும் பாடியுள்ளார் அவ்வாறு மற்றவர்களுக்கு தான் பாடும் பாடல்களுக்கு சம்பளம் எதுவும் பெற்று கொள்வதில்லை என அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்..!

பல சிறிய படங்களுக்கு முதல் முகவரி அனியின் குரல்தான் உதாரணமாக கனா படத்தின் ஒத்தையடி பாதை பாடல் ஒன்று போதும் அடியே என முழங்கிய அனிருத்தின் குரல்தான் படத்தின் பிரதான விளம்பரம்…!

மெர்சலாகிட்டேன் பாடி மெர்சலாக்கவும் முடியும் கனவே கனவே பாடி கண் கலங்க வைக்கவும் முடியும் அதுதான் அனிருத்…!

ரஜினி , கமல் , அஜித் , விஜய் ,சூர்யா என தற்போது தமிழ் சினிமாவின் அனைத்து உச்ச நட்சத்திரங்களுக்கும் இந்த சிறு வயதிலயே இசையமைத்தது அனிருத்தான், எஸ்பிபி ,ஜானகி ,ஜேசுதாஸ் ,தேவா என முந்தைய தலைமுறையை சேர்ந்த லெஜன்ட்களிடமும் பணிபுரிந்துள்ளார்…!

பிண்ணனி இசையில் கத்தி , வேதாளம் , விஐபி , பேட்ட என பல படங்கள் வெற்றி பெற அனிருத்தின் அந்தர் மாஸ் பிஜிஎம்களும் முதன்மை காரணம் ரசிகர்களின் மனதை புரிந்து வைத்து கொண்டு தற்போதைய டிரண்டை சிறப்பாக வெளி கொண்டு வருவதால்தான் அனிருத் இந்த அளவிற்கு வெற்றி பெறுகிறார் …!

இந்த வருடம் தெலுங்கில் இசையமைத்த இரண்டு படங்களும் அனிருத்தை அங்க கொண்டாட வைத்துள்ளது மேலும் பல மொழிப்படங்களுக்கு இசையமைத்து இந்தியாவின் ராக்ஸ்டாராக வலம் வர வாழ்த்துக்கள் ..!

பேட்ட ஆடியோ பங்கசனில் சூப்பர்ஸ்டார் சொன்னதுதான் அடுத்த ரகுமானாக அனிருத் வலம் வர வேண்டும் …!

அனிருத்தின் எனக்கு பிடித்த டாப் ஐந்து பாடல்கள் :

1.அம்மா அம்மா
2.யார் பெற்ற மகனோ
3.கனவே கனவே
4.ஜோடி நிலவே
5.உல்லாலா

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனிருத்…!