Penbugs
Editorial/ thoughtsInspiring

சமூக உரிமை புரட்சியின் தனல்! | Rosa Parks

உட்டகார்ந்ததன் மூலம் அமைதியான புரட்சியை தூண்டிய சமூக உரிமையின் அன்னை ரோசா பார்க்ஸ்.

மோண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்புக்கான(Montgomery bus boycott) பிரபலமான வினையூக்கியாக மாறுவதற்கு முன்னர் பல தசாப்தங்களாக வெள்ளை மேலாதிக்கத்தை சவால் செய்த ஒரு வாழ்நாள் ஆர்வலர் தான் பார்க்ஸ்.

இளம் வயதிலிருந்தே தன்னைச் சுற்றியுள்ள அடக்குமுறையை குற்றஞ்சாட்ட தயங்கவில்லை,அவள் ஒருமுறை எழுதியது

“வெள்ளை மேலாதிகத்தின் மனிதாபிமற்ற கறுப்பின மக்களின் மேல் செலுத்தப்படும் ஒடுக்குமுறை பற்றி எனக்குத் தெரிந்த அனைத்தையும் நான் பேசினேன் ,பேசுவேன்”

“வண்ண பிரிவு” இன் முதல் வரிசை

அலபாமாவின் (Alabama) மோண்ட்கோமரியில் முதல் இருக்கைகள் “வெள்ளை பயணிகளுக்கு மட்டும் வழங்கபட்டன” .நிறைந்த பேருந்தில் ரோசா பார்க்ஸ் முதல் இருக்கையில் அமர்ந்தன் மூலம் சமூக உரிமை புரட்சி துவங்கியது.

அவரின் எதிர்ப்பும் அதன் விளைவாக கைதும் வரலாற்றில் மிகப்பெரிய சமூக இயக்கங்களில் ஒன்றான மோண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்பாக மாறியது.

டெட்ராய்டின் (Detroit) சமூக உரிமை இயக்கத்தில் பார்கஸின் பணிகள் விலைமதிப்பற்றவை !

சமத்துவமின்மையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பணியாற்றிய பல அமைப்புகளின் தீவிர உறுப்பினராக செயல்பட்டார்!

“People always say that I didn’t give up my seat because I was tired, but that isn’t true. I was not tired physically, or no more tired than I usually was at the end of a working day. I was not old, although some people have an image of me as being old then. I was forty-two. No, the only tired I was, was tired of giving in”— From her autobiography, My Story

குடியரசுக்கட்சியின் சனாதிபதி போட்டியாளர்கள் 10 டாலரில் படம் அச்சிட விரும்பிய ஒரு பெண்ணைத் தேர்வு செய்யும்படி கேட்டபோது அதிக எண்ணிக்கை யிலான வாக்குகள் பார்க்ஸிடம் தான் சென்றன.

போராட்டத்திற்கு என்றுமே அளவுகோல் ஒன்று கிடையது. அதை எடித்துசெல்லும் துனிவை தான் நாம் பாவிக்க வேண்டும் .

என்றும் அநீதிக்கு எதிராய் போராடுவோம்!