Penbugs
Cinema

செல்வராகவன் தி ஜீனியஸ்…!

ஆமாம் அவர் ஜீனியஸ் தான் படம் குறைவான படங்கள்தான் , பாக்ஸ் ஆபிஸ்லயும் அவ்ளோ வெற்றி படம் இல்லைதான் ஆனாலும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு ஜீனியஸ் செல்வராகவன் …!

காதல எத்தனையோ பேர் எப்படி எப்படியோ படமாக்கிருக்காங்க சில யதார்த்த மீறலோட கூட காதல் காட்சிகளை தமிழ்சினிமா இன்னும் கொண்டாடிட்டுதான் இருக்கு காதல்னா அப்படியே மனம் சார்ந்த ஒன்று மாதிரியான நிறைய கதைகள் உண்டு , ஆனால் செல்வராகவனின் காதல் தொடங்கும் புள்ளியே பெரும்பாலும் உடல்சார்ந்த ஈர்ப்பாதான் இருக்கும்…!

காமம் என்ற புள்ளில ஒருத்தர பிடிக்க ஆரம்பிச்சி அதுக்கப்புறம் காதலை உணர்கிற மாதிரியான ஒரு கதையா 7G ரெயின்போ காலனிய சொல்லலாம். கதிர்க்கு அனிதா மீதான ஈர்ப்பு முதல்ல உடல்சார்ந்ததுதான் ஆனா அவ எப்டி அவனோட வாழ்க்கைல முக்கியமானான்னு சொல்ற ஒரு காட்சிதான் அந்த ஆக்சிடன்ட் சீன்க்கு அப்பறமா வர்ற அவங்க அம்மா கதிர் தலைல கைவைக்கிற காட்சி…!

தன் வாழ்க்கையவே மாத்தி போட்ட பொண்ண தப்பா பேசிருவாங்களோனு காதலை மறைச்சிட்டு பொய் சொல்லும் கதிரும் ,எல்லா விசயமும் தெரிஞ்ச அம்மா தன் மகளுக்காக தான் அவன் பொய் சொல்றான் தெரிஞ்சி அவன் தலையை வருடிட்டு போறது நினைச்சாலே புல்லரிக்கும் சீன் ….!

அதுக்கு அடுத்து கதிர் தூங்கிட்டானு நினைச்சி அவங்க அப்பா அம்மா பேசும் காட்சிலாம் செல்வாவின் எழுத்தில் மட்டுமே சாத்தியம் …!

அதுவும் தான் வாழ்ந்த கேகே நகரில் பார்த்த சம்பவங்களை திரையில் கொண்டு வந்தது செல்வாவின் மாஸ்டர் பீஸ் …!

இதுவரை எதுவுமே சரியா அமையாத ஒருத்தன் வாழ்க்கைல ஒருத்தி வந்து எல்லாத்தையும் மாத்தும்போது அவள இறுக்க பிடிச்சிக்க நெனைக்கிற ரொம்ப சாதாரணமான நம்ம மனசுதான், நம்ம இல்லாமையெல்லாம் சேர்த்தா வர்ற உருவத்துக்கு பேர் தான் வினோத்னு செல்வா கொடுத்த பாத்திரம் அது…!

பிடிச்ச வேலைய செய்யலனா செத்துட தோணும்போது நம்மளும் கார்த்திக்தான் நம்ம கனவுக்காக கைபிடிச்சி நிக்கற யாமினிகள்தான் வாழ்க்கைய அழகாக்கறாங்க.கார்த்திக்கும் யாமினியும் நம்ம கண்ணெதிரே வாழும் யதார்த்த உருவங்கள் அதை திரையில் காட்சிபடுத்துவதுதான் செல்வாவின் பலம்…!

ஆயிரத்தில் ஒருவன் வந்த அப்ப முழுசா நெகட்டிவ் விமர்சனம்தான் வந்தது படமும் ஓடவில்லை ஆனா இப்போது அந்த படத்தை உலகமே கொண்டாடுது அந்த காலத்தில் அந்த குறைவான பட்ஜெட்டில் இந்த அளவிற்கு எடுத்த செல்வாவின் உழைப்பு அளப்பரியது . நடராஜர் நிழல் தோன்றும் சீன் , பார்த்திபன் ஓபனிங் சீன் , தூதவன் பற்றிய ஓவியங்கள் என தன்னுடைய மொத்த ஜீவனையும் தந்து எடுத்த படம் அப்ப அது ஓடி இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும் ..!

செல்வா ஏன் ஜீனியஸ் என்று ஒரு காட்சி போதும் தமிழ் சினிமாவில் இதுவரை யாருமே அப்படி ஒரு காட்சியை வைத்ததில்லை .

இரண்டாம் உலகத்தில் ஹீரோயின் தன்னுடைய நண்பியை அழைத்து கொண்டு ஆர்யாவை காணும் காட்சி :

இந்த உரையாடல் :

தோழி : ஆளு கருப்பா இருக்கான் கலரா இருந்து இருக்கலாம் , ஹைட் ஓகே ,இரண்டு பேரும் வெயிட் இரண்டு மூனு விசயம்தான் சரியா வரும் மத்ததுலாம் கஷ்டம் , ஹேர் ஸ்டைல் நல்லா இல்ல, நெத்தி ஓகே , சோடா புட்டி அந்த விசயத்துல ஸ்டிராங்க இருப்பானு நினைக்கிறேன் , சின்ன மூக்கு ,வாய் கரெக்ட் சைஸ் , ரொம்ப நேரம் கிஸ் பண்ணலாம் , நாத்தம் வருதானு மட்டும் செக் பண்ணிக்கனும் , கழுத்து ஓகே ,இவ கட்டி பிடிச்சா தாங்குவான் , வயிறு சின்னது குடிகாரன் இல்ல , தைஸ் பெரிய டிராப்பேக் ,குச்சி காலு மொத்தத்துல டிரை பண்ணி பாக்கலாம் …!

இதான் செல்வா மற்ற இயக்குனர்கள் செய்யும் ஒரே பாணியை செய்யாமல் தோல்வி படத்திலும் அவரின் எழுத்து தனித்து தெரியும் …!

சில சறுக்கல் இருந்தாலும் செல்வா மீண்டும் ஒரு‌ ரவுண்ட் வரனும் …!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீனியஸ் ❤️

Related posts

World is laughing at you because you are handicap: Selvaraghavan’s message to his young self!

Penbugs

Official: Selvaraghavan-Dhanush to collaborate for Pudhupettai 2

Penbugs