Penbugs
Cinema

சில்லுக் கருப்பட்டி – Review

சில்லுக் கருப்பட்டி – சிறப்பான காதல் “டீ”

கவிதைகளை அப்படியே படமாக மாற்றி திரையில் கவிதைத்துவம் வாய்ந்த வகையில் அமைத்து நமக்கு வழங்கியுள்ளார்கள்..!

தமிழ் சினிமாவில் பல கதைகளைக் கொண்டு அதற்கு முடிச்சிப் போட்டு ஒரு படமாக தயாரிப்பது வழக்கம் அதில் இருந்து சிறு மாறுபட்டு இந்த கதைக்களத்தை உருவாக்கியுள்ளார்கள் படக்குழுவினர்.

படத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து அதில் சம காலங்களில் வேறுபட்ட வயதுடைய மக்களிடையே ஏற்படும் காதலை அருமையாகக் கையாண்டுள்ளார் இந்த படத்தின் இயக்குநர்.

முதல் கதை – PINK BAG:

இனம் புரியாத குழந்தை பிராயத்தில் ஏற்படும் காதலை அழகாகவும், எளிமையாகவும்.. கதைக்குத் தேவையான அளவும் கொடுத்துள்ளார்கள்… பழங்காலத்தில் காதலைச் சொல்ல பல தூது விடும் முறை கையாளப்பட்டது… ஆனால் இதில் “குப்பை” மூலம் காதலைத் தூது அனுப்பியது அதீத முயற்சியின் எடுத்துக்காட்டு..!

இரண்டாம் கதை – காக்கா கடி:

ஒரு 25-30 வயதுடைய இளைஞர்கள் இடையே ஏற்படும் காதல்…
எல்லாரும் அறிந்த மீம் கிரியேட்டரின் வாழ்வில் ஏற்படும் வேலைச் சுமை மற்றும் காதல், அவர் சந்திக்கும் பிரச்சனைகள்.. அவர் படும் துன்பங்கள், எதிர்பாராத விதமாக அவர் சந்திக்கும் உடல் சார்ந்த பிரச்சனையை மீண்டு வந்தாரா?? அதில் இருந்து மீண்டு வர காதல் எவ்வாறு உதவியது..? காதலை ஆழமாக அவர் நம்பும் அந்த நம்பிக்கை அதை ஒட்டியே கதை நகர்கிறது… மணிகண்டன் தான் ஏற்ற மீம் கிரியேட்டரின் கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளார்.. இந்த காதல் கவிதையில் புதிதாக “OLA cab” தூது போனது என்பது மிகை..!

மூன்றாம் கதை – Turtle Walk:

ஆமை போல மெதுவாக நடந்து, காதலுக்கு வயதில்லை என்பதையும் காதல் எந்த நேரத்திலும் வரலாம் என்பதையும் இந்த கதையின் மூலமாக இரு வயது-முதிர்ந்தவர்களை வைத்து உயிரூட்டியுள்ளார்.. இந்த கதையின் நகர்வு நம்மை விட முதியவர்களின் இன்பத் துன்பங்களை அழகாக விவரிக்கிறது ..! இதில் லீலா சாம்சனின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது. இதிலோ “ஆமை” தான் வயதான காதலின் தூதுவன்..!

நான்காம் கதை – Hey Ammu:

ஒரு நடுத்தர குடும்பத்தின் நிலைமை மற்றும் அவர்கள் வீட்டில் நடக்கும் விஷயங்களை சமுத்திரக்கனி மற்றும் சுனைனாவை வைத்து அதற்கு முடிச்சிப் போட்டு விட்டுள்ளார்.. காமம் என்பது எவ்வளவு தான் தாம்பத்திய உறவில் முக்கியம் என்றாலும்.. காமத்தில் உள்ள காதல் அதை விடத் தாம்பத்தியத்தில் அவசியம் என்பதை இதை விடத் தெளிவாக யாராலும் சொல்ல முடியாது… இதில் “Alexa” தூது போனது இன்னும் கூடுதல் ஆச்சர்யம்தான்..!

கதையைப் பற்றி பேசிய நாம் இந்த கதையின் மூலமாக விளங்கும் இசையமைப்பாளர் பிரதீப் குமார் பற்றியும் பேசியே ஆக வேண்டும்… ஒவ்வொரு அசைவிலும் காதலின் இழையோட்டதிற்கு தன் இசை மூலம் உயிர் தந்துள்ளார் ..! பாடல்கள் பரிட்சையம் ஆகவில்லை என்றாலும் பின்னணி இசை படத்தின் பலம்..!

படத்தில் தன் பங்கை செவ்வனே செவ்வானத்தை படம் பிடித்து அசத்தியுள்ளார் படத்தின் கேமராமேன்..

இந்த ஆண்டில் சிறந்த மற்றும் குடும்பமாகப் பார்க்க வேண்டியப் படங்களில் ஒன்றாக இதைத் தாராளமாக சேர்க்கலாம்..!
மொத்தத்தில் இந்த படத்தில் இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்களின் எழுத்தும் இயக்கமும் பாராட்டகூடிய இரு அருமையான விஷயங்கள்..! இதே போன்ற காவியங்கள் மெதுவான சுவாரஸ்யமான கதைக்களம் கொண்ட படங்கள் வந்தால் தமிழ்ச் சினிமா எல்லோராலும் பாராட்டப்படும்…!

சூர்யா அவர்கள் மேலும் மேலும் இது போன்ற படங்களை வழங்க வேண்டும் என்பது தனிப்பட்ட கருத்து..!

Related posts

வினோதய சித்தம் விமர்சனம்

Kesavan Madumathy

மணிரத்னத்தின் பிரம்மாண்டமான ஆந்தாலஜி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது

Penbugs

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதீப்குமார்!

Shiva Chelliah

சில்லுக்கருப்பட்டி பட இயக்குநரை பாராட்டிய சாய் பல்லவி!

Penbugs

Sethum Aayiram Pon Netflix [2020]: A deeply felt portrayal of death and its indispensability to life

Lakshmi Muthiah

Halitha celebrates Sillu Karupatti’s 50th day with Suriya and Jyothika

Penbugs

Chai With Halitha Shameem | Director | Inspiration

Shiva Chelliah