Penbugs
CoronavirusPolitics

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்துவதாக வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு

தமிழகத்தில் தற்போது பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

கொரோனா உச்சத்தில் இருந்தபோது ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சரிசெய்ய உச்சநீதிமன்றமும், தமிழக அரசும் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் திறக்க அனுமதியளித்தன.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மே மாதம் மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.

இதன் தொடர்ச்சியாக வாயு நிலையிலான மருத்துவ பயன்பாட்டு ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைத்து விநியோகம் செய்யும் பணியையும் ஸ்டெர்லைட் நிறுவனம் ஜூன் மாதம் தொடங்கியது. இங்கு உற்பத்தியாகும் மருத்துவப் பயன்பாட்டுக்கான திரவ மற்றும் வாயு ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் தொடர்ந்து அனுப்பப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்த அனுமதி, நாளையுடன் முடிவடையும் நிலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஸ்டெர்லைட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Comment