Penbugs
Editorial News

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள்- 2020 வரைவுக்கு நடிகர் கார்த்தி எதிர்ப்பு

மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவுக்கு நடிகரும், உழவன் அமைப்பின் நிறுவனருமான கார்த்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

குமரி முதல் காஷ்மீர் வரையிலான சட்டம் என்ற போதிலும் வரைவறிக்கை இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா பிடியில் இருந்து மீள போராடிக் கொண்டிருக்கும் வேளையில் நம்முடைய வாழ்வாதாரத்தையும், எதிர்கால சந்ததியினரின் வாழ்வையும் நிர்ணயிக்கக்கூடிய சக்தியுள்ள சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

வரைவு அறிக்கை சாதக பாதக அம்சங்களை பொது விவாதமாக்கி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்றும்
[email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் ஆகஸ்ட் 11க்குள் கருத்துகளை பதிவு செய்வோம் என கார்த்தி கேட்டு கொண்டுள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்தினை தெரிவித்து இருந்த கார்த்திக்கு அவரது அண்ணன் நடிகர் சூர்யா அவர்களும் ஆதரவினை தெரிவித்துள்ளார் ‌.

Related posts

கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளித்த நடிகர் சிவகுமார் குடும்பம்

Kesavan Madumathy

Paruthiveeran singer Lakshmi Ammal struggles financially, Karthi promises help

Penbugs

Leave a Comment