மேதகு ஆளுநர் தமிழிசை

இந்திய அரசியல் வரலாற்றில் பெண் தலைவர்கள் என்பது மிக அரிது. தமிழகத்தை பொறுத்தவரை அம்மையார் ஜெயலலிதா மட்டுமே ஒரு வெற்றிகரமான இயக்கத்தின் தலைவராகவும் , தமிழகத்தின் முதலமைச்சராகவும் விளங்கினார் .அவருக்கு பிறகான பெண் தலைவர்களில் குறிப்பிட தக்கவர் தமிழிசை சௌந்தரராஜன்..!

எம்ஜீஆர் – கலைஞர் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்ற திருமணம் தமிழிசையின் திருமணம் அந்த அளவிற்கு பெரிய குடும்பத்தில் பிறந்தவர் தமிழிசை ‌..!

மற்ற அரசியல்வாதிகள் போல் இல்லாமல் தமிழிசை எதிர்கொண்ட பிரச்சினைகள் வித்தியாசமானவை.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாரம்பரிய குடும்பத்தில் பிறந்து அதற்கு நேர் எதிர் சித்ததாங்களை கொண்ட பாரதிய ஜனதாவில் சேர்ந்ததே பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது .

தமிழகத்தில் வெறும் லெட்டர் பேட் கட்சியாக இருந்த பாரதிய ஜனதாவை தன்னால் இயன்றவரை தன்னுடைய சுற்றுபயணங்களாலும் , தன்னுடைய வெளிப்படையான பேச்சுகளினாலும் தமிழகத்தில் பாஜக ஒரு அளவிற்கு வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது இவர் தலைவர் ஆன பின்புதான் .

உருவ கேலியால் அதிகம் விமர்சனம் செய்யப்பட்ட தலைவர்களுள் இவர் முதன்மையானவர் அரசியல் எதிர்கருத்து என்பதாலே அவரின் உருவ அமைப்பு , உயரம் , தலைமுடி என இவர் எதிர்கொண்ட கேலிகள் ஏராளம் அத்தனை உருவ கேலிகளையும் தன் புன்னைகயாலே கடந்து சென்று அவர்களின் பணி என்னை கேலி செய்வது என் பணி என்னால் முடிந்தவரை மக்கள் தொண்டாற்றுவது அதில் நான் உறுதியாக உள்ளேன் என்று கூறி தன் பயணத்தை தொடர்ந்தவர் .

மருத்துவர் , குடும்ப தலைவி , அரசியல் கட்சி தலைவி என பன்முக தன்மை கொண்டு இருபத்தி நான்கு நேரமும் ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருப்பவர் தமிழிசை..!

சுற்றுபயணங்களின் போதும் , பிரசாரத்தின்போதும் மருத்துவ உதவி வேண்டி வரும் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்றவரை அனைத்து மருந்துவ உதவிகளையும் செய்து தந்துக் கொண்டிருப்பவர் சமீபத்தில் கூட பிரசாரத்தின் போது ஒருவரின் உடல் உபாதையை தன் சொந்த செலவில் சரி செய்து தந்தவர்.

இதுவரை இருமுறை சட்டமன்றத்திற்கும் , இருமுறை நாடாளுமன்றத்திற்கும் நின்று தோற்றாலும் இன்று வரை தன்னால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்குக் தான் சார்ந்த கட்சியின் கொள்கைகளையும் , கட்சியை வளர்க்கவும் அல்லும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருப்பவர்..!

டாக்டர் தமிழிசை நமக்கு உணர்த்தும் பாடங்கள் :

  1. தான் கொண்ட கொள்கை சரி தவறு என்பதை விட தான் ஒரு கொள்கையை எடுத்து கொண்டால் அதில் முழு மூச்சாக இறங்கி விட வேண்டும்.
  2. உருவ கேலிகளை புன்னகையால் எதிர்கொள்வது .
  3. தோல்வியை கண்டு துவளாமல் நமக்காக ஒதுக்கப்பட்ட வேலையை செய்தால் அதற்கான பலன் நிச்சயம் வந்தே தீரும்.

இன்று அவரின் உழைப்புக்கு ஏற்ற பரிசு அவரை தேடி வந்துள்ளது தெலுங்கனா மாநிலத்திற்கு முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்‌ வாழ்த்துக்கள் தமிழிசை அக்கா…!