Penbugs
Cricket IPL Men Cricket

தலைவன் ஒருவனே – இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோனி

தோனி ஒரு சாதாரண வார்த்தையா கடந்து போக முடியாத பெயர் எனக்குள்ள இன்னமும் கிரிக்கெட் ஆர்வம் உயிர்ப்புடன் இருக்குனா அதில் பெரிய பங்கு தோனிக்குதான் .

என்னுடைய இளம்பருவத்தில் இருந்து இப்ப வரைக்கும் பல்வேறு காலகட்டங்களில் கிரிக்கெட் உருமாறி இருக்கு நிறைய புதிய பிளேயர்ஸ் , நிறைய மாற்றங்கள் , விதம்‌ விதமான ஸ்டோக்ஸ் ஆடும் முறைகள் என்று கிரிக்கெட் காலத்திற்கு ஏற்ற‌மாறி தன்னையும் அப்டேட் பண்ணிட்டே இருக்கு, இந்த ஒவ்வொரு மாற்றத்தையும் தோனியின் கண் வழியாக , தோனியின் வியூகம் எப்படி இதுக்கு இருக்கும் எப்படி இந்த மனுசன் இதை எதிர்கொள்வார் என்றுதான் பார்ப்பேன் தோனி ஒரு போதை அதுவும் அவரை ரொம்ப உன்னிப்பாக ரசிச்சு கவனிக்க ஆரம்பிச்சா அவர் ராஜ போதை .

தோனி ஒரு பேட்ஸ்மேனா அணியின் உள்ளே வந்து முதல் சில போட்டிகள் சொதப்பின அப்ப அதுக்கு முன்ன‌ இருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மாதிரிதான் இவரும் போல சுமாரா ஆடி கீப்பிங் மட்டும் பண்ணிட்டு போகப்போறான் இந்த ஆளுனு தோணிச்சு , எல்லாருக்கும் ஒரு பிரேக்கிங் பாய்ண்ட் வாழ்க்கையில் வரும் அது தோனிக்கு கொஞ்சம் சீக்கிரமே வந்துச்சு‌ பாகிஸ்தான் இந்தியா மேட்ச்னா இந்தியாவே பார்க்கும் அந்த மேட்ச்ல ஒரு புது பையன் எதை பத்தியும் கவலைப்படாமல் அடிச்சு வெளுத்து ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் தன்னுடைய வருகையை தெரியபடுத்தினான்.

முதல் மேட்ச் சதம் அடிச்சவங்க , ஆரம்பத்திலயே நல்லா ஆடினவங்க நிறைய பேர் இருக்கும்போது தோனி ஏன் அவ்ளோ ஸ்பெஷல்னா இந்திய பேட்டிங்ல அதுவரைக்கும் அதிகமா டெக்னிக்கலா ஆடும் பேட்ஸ்மேன்தான் இருப்பாங்க , பந்து மதிச்சு ஆடுவாங்க எந்த அளவுக்குனா ஓவர் பிட்ச் பந்தே வந்தாலும் டிரைவ்ஸ் ஆடுவாங்க இதை எல்லாம் மாற்றி போட ஒருத்தன் வந்தான் பந்து வர்ற திசையில் பேட்டை விட்றது கனெக்ட் ஆச்சுனாலும் ரன் கனெக்ட் ஆகலனாலும் ரன் அதுதான் தோனி , நல்ல நியாபகம் இருக்கு பாகிஸ்தான் கிட்ட ஒரு மேட்ச்சில தோனி பேட்டை விடுவார் கேமராமேன் லாங் ஆன்ல கேமராவை காட்டுவான் ஆனா சிக்ஸ் தேர்ட்மேன் கிட்ட போயிட்டு இருக்கும் ‌. சினிமாவில் எவ்ளோதான் கலைப்படங்கள் வந்தாலும் கமர்ஷியல் படத்திற்கு எப்பவுமே மவுஸ் அதிகம் அது மாதிரிதான் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கமர்ஷியல் பேக்கேஜ்‌.

2005ல் இருந்து 2007 வரை ஒரு‌ பிளேயரா மட்டும் வியக்க வைச்சிட்டு இருந்த தோனி , 2007 உலககோப்பை பிறகு ஒரு தலைவனா இன்று வரை அந்த அரியாசனத்துல இருந்துட்டு இருக்கார். அந்த உலககோப்பை முதன்முதலாக கேப்டன் பொறுப்பு வருது அணியின் சீனியர் வீரர்கள் எல்லாரும் ஒதுங்க ஒரு சில பேரை தவிர மீதி எல்லாரும் அனுபவம் இல்லாத இளம் பிளேயர்கள் பாகிஸ்தான் கூட லீக் மேட்ச்ல பவுல் அவுட் வந்த அப்ப பார்ட்டைம் பவுலரை யூஸ் பண்ணது முதல் அட போட வைச்சது .

அந்த டி20 உலககோப்பை ஜெயிச்ச அப்பறம் எதை தொட்டாலும் வெற்றிதான் இந்திய அணி ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி பயணப்பட ஆரம்பிச்சது .

ஒரு கேப்டனா ஏன் தோனி ஸ்பெஷல் கேட்டா ஒரு தலைவனுக்கு உண்டான பெரிய குவாலிட்டியே தனக்கான அணியை தீர்மானிக்கிறதுதான். தனக்கான அணியை சரியா தேர்வு செய்து , ஒவ்வொரு வீரர்களிடம் இருந்தும் அவங்களோட பெஸ்ட் வாங்கறதுதான் நல்ல தலைமை, இதை பல இடங்களில் தோனி நிரூபித்து கொண்டிருக்கிறார்.

உதாரணமாக சரியாக ஆடாத பிளேயர்ஸ் கூட தோனியின் கேப்டன்ஷிப்ல கொஞ்சம் நல்லா அவர்களின் முழு திறமையை காட்டுவாங்க ஏன்னா அவங்களுக்கு ஒரு மோரல் சப்போரட்டா தோனி இருக்கிறார் என்ற ஒரு தைரியம் அங்கதான் தோனி ஜெயிக்கற இடம் ,மற்ற கேப்டன்கள் தோற்கும் இடம் .

எத்தனை பேர் சிஎஸ்கே கம்பேக் பிரபரேசன்ஸ் பார்த்து இருப்பீங்கனு தெரியல அதுல தோனியின் மைண்ட் செட் ரொம்ப தெளிவா இருக்கும் எல்லா ஐபிஎல் டீமும் கரண்ட் டிரெண்ட்ல யார் ஹாட் கேக்கா இருக்காங்களோ அவங்களை ஏலத்துல எடுக்க சண்டை போட்டுட்டு இருக்கறப்ப சென்னை மட்டும்தான் ரொம்ப குறைவான செலவில் ரிடையர்ட் ஆன பிளேயர்ஸா பார்த்து ஏலம் எடுத்துச்சு .

அந்த வீடியோவில் தோனி சிஎஸ்கே மேனேஜ்மென்ட்க்கு விளக்கம் தரும் ஒரு பகுதி வரும் அதில் வாட்சன் , ராயுடு , ஹர்பஜன் பிளஸ் மைனஸ்லாம் சொல்லிட்டு இருப்பார் அதோடு அந்த சீசன் முடியறவரை இருக்க முடிந்த பிளேயரை மட்டும் தான் அதிகமா தேர்வு செய்யனும் என்று சொல்லிட்டு இருப்பார்.ரொம்ப வியந்த விசயம் என்னனா அந்த வீடியோவில் ராயுடு , வாட்சன் பெயர் எழுதிட்டு வி ஹேவ் டு பர்கெட் ப்ரேபிளே அவார்ட் திஸ் டைம் அப்படினு சொல்வார் ஏன்னா இரண்டு பேருமே உடனே கோபப்பட்டு ரியாக்ட் பண்ணிடுவாங்க அதனாலா பேர் பிளே அவார்ட் இந்த முறை கஷ்டம்னு சிரிச்சிட்டே சொல்லுவார் இதுலாம் அவ்ளோ பெரிய விசயமானு கேக்கலாம் மத்த டீமை விட தொடர்ந்து சென்னை ஜெயிக்க இதுலாம்தான் ஒரு காரணம் .கடைசி ஏலத்துல கூட பியூஷ் சாவ்லா ஏன் அந்த அளவிற்கு செலவு பண்ணி எடுத்தார்னு யாருக்கும் தெரியாது ஆனாலும் தோனியின் கணக்கு தப்பாத கணக்கு அது ஐபிஎஸ் நடந்தா ஏதாவது ஒரு இடத்துல நிரூபணம் கண்டிப்பாக ஆகும்.

ரீசன்டா வந்த மிஸ்டர் கிரிக்கெட் மைக்கேல் ஹஸ்ஸியின் பேட்டியில் கூட தன்னுடைய கேரியரில் சந்தித்த பெஸ்ட் கேப்டன் என்று தோனியை குறிப்பிட்டார் . உலகின் தலைசிறந்த ரிக்கி பாண்டிங்கை விட சிறந்த கேப்டன் தோனினு ஒரு சாதாரண ஆள் சொன்னா நாம கடந்து போகலாம் ஆனால் சொன்னது கிரிக்கெட்டின் அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்த மைக் ஹஸ்ஸி சொல்றதுலாம் தோனியின் வளர்ச்சிதான்.

சர்வதேச போட்டியில் கிட்டத்தட்ட இறுதிக்காலத்தில் இருக்கும் தோனி குறைந்தபட்சம் அடுத்த ஐந்து சீசனாச்சும் ஐபிஎல் ஆடனும் என்பதுதான் என்னுடைய சின்ன ஆசை‌‌.

இந்திய கிரிக்கெட் இதுக்கு அப்பறமும் நிறைய கேப்டனை சந்திக்க போது எல்லாருக்கும் ஒரு பெரிய ரெபரன்ஸ்ஸா இருக்க போறது என்னவோ தோனியின் சாதனைகள் மட்டுமே ஏன்னா தலைவன் ஒருவனே ….!

Related posts

ACC Women’s Emerging Teams cup final: India defeats Sri Lanka by 14 runs!

Penbugs

I am sure Kuldeep will bounce back strongly: Jacques Kallis

Penbugs

2012 World Cup T20: As it happened!

Penbugs

Leave a Comment