Penbugs
Editorial NewsInspiring

தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பிறந்தநாள்

சேலம் மாவட்டம் எடப்பாடி நெடுங்குளம் அருகே உள்ள சிலுவம்பாளையத்தில் 1954ஆம் ஆண்டு ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். எம்ஜிஆர் மீதான ஈர்ப்பினால் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டு பல சிறு சிறு பதவிகளை பெற்று கட்சியில் மாவட்ட அளவிலான பதவியை அடைந்தவர்.

1989 ஆம்ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இடைப்பாடி தொகுதியில் அதிமுக சார்பாக சேவல் சின்னத்தில், போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டாக பிரிந்த அதிமுகவில் அம்மாவின் சின்னமான சேவல் சின்னத்தில் நின்றார் எடப்பாடி .

பின்னர் 1991ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார் .

1998ஆம் ஆண்டு – நாடாளுமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதி அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

2011ஆம் ஆண்டில் – மீண்டும் எம்.எல்.ஏ. பதவியை பெற்றதோடு மட்டுமில்லாமல் இத்தனை காலம் கட்சிக்கு தந்த நம்பிக்கைக்கு பரிசாக தமிழக அமைச்சரவையிலும் இடம்பிடித்து, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் ஆகிய துறைகளுக்கு பொறுப்பு வகித்தார். ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து அமைச்சர் பதவியை பெற்றதறக்கு அவரின் விஸ்வாசமும் ,உழைப்புமே காரணம் …!

2016ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்த போது பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் …!

இதோடு எடப்பாடியின் வரலாறு முடிந்து கூட இருக்கலாம் ஆனால் எடப்பாடியின் 2 .O முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இறப்புக்கு பின்னர்தான் தொடங்கியது ‌.

எடப்பாடி பழனிசாமி பதவியேற்று கொண்ட சூழல் மிகவும் தடுமாற்றமான அரசியல் சூழல் .

கட்சி பிளவு , சட்டசபையில் மிகவும் பலம்வாய்ந்த எதிர்கட்சிகளின் அரசியல் ,மத்திய அரசின் அழுத்தம் என இதுவரை எந்த முதல்வரும் சந்திக்காத பிரச்சினைகளுடன் முதல்வராக ஆனவர் எடப்பாடி ‌….!

அவரது ஆட்சி இன்று கவிழ்ந்து விடும், நாளை கவிழ்ந்து விடும் என்று சொல்லாத ஆட்களே இல்லை சொந்த கட்சி ஆட்களுக்கே நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தது ‌.

எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பொதுக்கூட்டத்தில் இந்தப் பொதுக்கூட்ட மேடையில் இருந்து நான் இறங்கும் முன்பாகவே எடப்பாடி ஆட்சி கவிழ்ந்துவிட வாய்ப்பு இருக்கிறது’ என அவர் பேசும் பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். எதிர்கட்சி எம்எல்ஏ பகிரங்கமாக நாங்கள் பதவியேற்பது உறுதி என டிவீட்லாம் செய்தார்.

பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை தனது ஆதரவாளர்களாக தக்க வைத்துக்கொண்டு ஆட்சியை தடுமாற்றம் இல்லாமல் செலுத்த ஆரம்பித்தார் எடப்பாடி…!

அம்மையார் ஜெயலலிதா இருந்தவரை அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் செயல்பட்டு வந்தது ‌. எடப்பாடி வந்த பின் அவர் எப்படி வழி நடத்த போகிறார் என்ற வினாவிற்கு தன்னுடைய சிரித்த முகத்தில் அனைவருக்கும் சரிசமமான அளவு முன்னுரிமை , அமைச்சர்கள் தங்களின் இலாகா பற்றி வெளிப்படையாக பத்திரிகையாளர் சந்திப்பு என வித்தியாசமான பாணியில் அதிமுகவை கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.

ஒரு வாரம் கூட நீடிக்க முடியாது என்று கூறப்பட்ட அரசை நான்காவது ஆண்டுடினை நோக்கி வெற்றிகரமாக நடத்தி வருவது அவரின் சாதனையே…!

சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வென்று ஆட்சியை தக்க வைத்தது , எதிர்கட்சிகளின் எண்ணிக்கையற்ற போராட்டங்கள் அனைத்தையும் எதிர்கொண்டது , அவர் சார்ந்த மாவட்டமான சேலத்திற்கு நிறைய திட்டங்களை கொண்டு வந்தது , அனைவரும் எளிதில் தொடர்பு கொள்ள கூடிய வகையில் இருப்பது , கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அரசு இயந்திரத்தை முழுக்க திருப்பியது , அம்மா உணவகங்களில் இலவச உணவு, வெளி மாநில தொழிலாளர்கள் பயணச் செலவு ஏற்பு , முன்னறிவிப்பின்றி செய்யப்படும் சோதனைகள் என சராசரி மனிதர்கள் அட இந்த ஆளு பரவால்லயே இவ்ளோ பண்றார் பாரேன் சொல்ல வைச்சது நிச்சயம் எடப்பாடியின் பெரிய வெற்றிதான்..!

வாய்ப்புகள் வந்தால் அதனை எவ்வாறு தனக்கு ஏற்றவாறு மாற்றி கொள்ள வேண்டும் என்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒரு உதாரணம் !

Related posts

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

Kesavan Madumathy

வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு 2 கோடி ஊக்க தொகை – முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு

Kesavan Madumathy

விழுப்புரம் சிறுமி கொலை: முதல்வர் பழனிசாமி கடும் கண்டனம்!

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

Penbugs

வாட்ஸ்ஆப் அட்மின்களே ஜாக்கிரதை..! நீங்கள் கைதாகலாம்.!

Penbugs

லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்

Penbugs

மூடப்பட்ட பள்ளி ; கடிதம் எழுதிய முதல்வர் எடப்பாடி

Penbugs

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடான வேதா நிலையம் அரசுடைமையானது.

Penbugs

மதிப்பு கூட்டுவரி அதிகரிப்பு : உயரும் பெட்ரோல், டீசல் விலை

Penbugs

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அரசுக்கு ஆலோசனை

Penbugs

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!

Kesavan Madumathy