Penbugs
Coronavirus

தமிழகத்திலிருந்து முதல் சிறப்பு ரயில்!’ -ஜார்க்கண்ட் அனுப்பிவைக்கப்பட்ட 1,140 பேர்

வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும், ‘கொரோனா’ லாக்டௌன் காரணமாக மீண்டும் ஊர் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. அதேபோல், கூலி வேலைக்கு வந்த வடமாநிலத் தொழிலாளர்களும் சொந்த ஊர் செல்ல விருப்பப்பட்டனர். அதையடுத்து, ஆன்லைன் மூலம் அவர்களின் விவரங்கள் பெறப்பட்டன.

அதன்படி, முதற்கட்டமாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1,140 பேரை சிறப்பு ரயில் மூலம் காட்பாடியிலிருந்து அனுப்பிவைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளைச் செய்தது.

அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தமாகக் கழுவவைத்து, முகக்கவசம் அணியச்செய்து, அரசுப் பேருந்துகள் மூலம் காட்பாடி ரயில் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

ஏற்கெனவே தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 24 பெட்டிகளைக் கொண்ட சிறப்பு ரயிலில், தனிமனித இடைவெளி விட்டு அவர்கள் அமரவைக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா தடுப்பு மண்டல சிறப்பு கண்காணிப்புக் குழு அலுவலர் மங்கத்ராம் சர்மா, கலெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் உணவுப் பொட்டலங்களைக் கொடுத்து வழியனுப்பிவைத்தனர்.

நள்ளிரவு 11 மணியளவில், சிறப்பு ரயில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்குப் புறப்பட்டது. கொரோனா காலகட்டத்தில், தமிழகத்திலிருந்து இயக்கப்படும் முதல் சிறப்பு ரயில் இதுதான் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், அடுத்தடுத்த கட்டமாக மீதமுள்ள வெளிமாநிலத்தவர்களும் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளையும் வேலூர் மாவட்ட நிர்வாகம் தீவிரமாகச் செய்துவருகிறது.

Related posts

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

Kesavan Madumathy

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு 2 கோடி ஊக்க தொகை – முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு

Kesavan Madumathy

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

Penbugs

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

Penbugs