Penbugs
Coronavirus

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளிவைப்பு-தமிழக அரசு

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஏப். 18) வெளியிட்ட செய்தி வெளியீடு:

“வரும் 20-ம் தேதி அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை கீழ்க்கண்ட உத்தரவுகள் அமலில் இருக்கும்.

பிளஸ் 2 மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இருப்பினும், பிளஸ் 2 மாணவர்களுக்காக தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத் தேர்வு மட்டும் ஏற்கெனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.

கல்லூரி / பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாக வகுப்புகளை எடுக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் கல்லூரி / பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா..!!

Kesavan Madumathy

தமிழகத்தில் நாளை முதல் ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி!

Kesavan Madumathy

தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. இ-பாஸ் முறை ரத்து- தமிழக அரசு

Penbugs

சிட்டு..!

ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Kesavan Madumathy

COVID19: TN to decide on lockdown extension tomorrow

Penbugs

COVID19: TN reports 48 new cases

Penbugs

COVID19 in TN: 52 new cases, 81 discharged

Penbugs

10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ; சிபிஎஸ்இ அறிவிப்பு…!

Penbugs

Leave a Comment