Penbugs
Inspiring

தாரக மங்கைகள்..!

நீங்க என்ன சாதி..?
நீங்க என்ன மதம்..?
நீங்க என்ன மொழி பேசுறவங்க..?

இந்த கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் செவிலியர்கள்,

யார் இந்த செவிலியர்கள்..?

ஒரு நோயாளிக்கு மருத்துவரின் பரிந்துரையின்படியும் அறிவியல் ரீதியாகவும் அவனுக்கு சிகிச்சை அளித்து அவர்களின் உடல்நலம் சம்பந்தப்பட்ட தேவைகளை கவனிக்கும் கடவுள், கையில் ஊசி எனும் ஆயுதம் எப்போதும் இருக்கும்,

இது ஒரு சேவை மனப்பான்மை சார்ந்த தொழில், சேவை மனப்பான்மை ஆண்களை விட பெண்களுக்கு எப்போதுமே கருணை ரீதியில் கொஞ்சம் அதிகம், அதனாலோ என்னவோ இந்த சேவை துறையில் பெண்களே அதிகம் தங்களை அர்ப்பணித்து சேவை செய்கின்றனர்,

கை கால் தூக்க முடியாமலும் உடம்பில் வலு இல்லாமலும் ஒரு நோயாளி மருத்துவமனைக்கு வரமுடியவில்லை என்றாலும் அவர்களின் இல்லத்திற்கே சென்று அவர்களுக்கு தகுந்த மருத்துவ ஆலோசனை கொடுத்து சரியான சிகிச்சை கொடுப்பவர்கள்,

அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களுக்கு உதவி செய்வதில் இருந்து நோயாளிகள் மீது காட்டும் அக்கறை வரை, ஒரு கடும் நோய் ஊருக்குள் பரவினாலும் தூக்கம், குடும்பம்,தனது உயிர் என்று எதை பற்றியும் கவலை கொள்ளாமல் பிற உயிர்களுக்காக தங்கள் உயிரை பிணைய கைதியாய் அந்த நோயிடம் ஒப்படைத்து விட்டு தங்களிடம் வரும் ஒவ்வொரு நோயாளியிடமும் அன்பாகவும் சிரித்த முகத்துடனும் பணிவாக கவனிக்கும் தூய்மை நெஞ்சம் கொண்டவர்கள்,

சாதாரண காய்ச்சலில் இருந்து
எச்.ஐ.வி எய்ட்ஸ் முதல் ஒரு நோயாளி
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும்
அவனுக்கு பணிவிடை செய்வதில் இருந்து பத்திய உணவு கொடுக்கும் வரை செயல்படும் அன்னை தெரசாக்கள் அவர்கள்,

செவிலியர்கள் தினம் என்பது எப்படி வந்தது..?

செவிலியர் பணியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து அதில் சிறந்து விளங்கியவர் தான் நைட்டிங்கேல் அம்மையார்,

அவர்கள் பிறந்த மே 12 – அன்று தான் உலக செவிலியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது உலகம் முழுவதும்,

இந்த 2020 – ஆம் ஆண்டு நைட்டிங்கேல் அம்மையாரின் 200 – ஆவது ஆண்டு, இவர் இத்தாலி நாட்டில் பிறந்தவர்,

கிறிஸ்தவர் என்ற முறையில் தனக்கு இறைவனால் விதிக்கப்பட்ட பணியாக தாதியர் சேவையை அவர் உணர்ந்தார்,

இந்த அழகான தினத்தில் நைட்டிங்கேல் அம்மையாருக்கு ஒரு நான்கு வரிகள் எழுதவில்லை என்றால் எப்படி ஹ்ம்ம்,

||

மனதில் மிகவும் உறுதி கொண்டீர்கள்
செவிலியராய் பணியை தொடர்ந்தீர்கள்
அடுத்து பிறக்கப்போகும் பல்லாயிரம் தலைமுறைக்கு அறிவியல் சார்ந்த
ஒரு துறையை ஏற்படுத்தி கொடுத்தீர்கள்
நித்தம் உங்கள் சேவை ஒவ்வொரு செவிலியர் மூலமும் உலகத்தில் நினைவு படுத்திக்கொண்டு தான் இருக்கிறது,

||

மருத்துவம் விலை போனாலும்
சில மருத்துவர்கள் பணம் பார்த்தாலும்
செவிலியர்கள் மட்டும் என்றும் மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் தேவன் அனுப்பிய செஞ்சிலுவை தாரகைகள்,

உலக செவிலியர் தினத்தை நைட்டிங்கேல் அம்மையார் பற்றி தெரிந்து கொண்டு நாமும் அவர்களின் பணி சிறக்க இன்று வாழ்த்துவோம்,

கடவுள் இருக்காரா..?
இதோ செவிலியர் ரூபத்தில்
மனிதம் தான் சார் கடவுள்..!!

Related posts

கொரோனாவிற்கு எதிரான போரில் செவிலியராக மாறிய நடிகை – குவியும் பாராட்டுக்கள்

Penbugs

Video: Nurses beat Haryana doctor for sexual harassment

Penbugs

Recent: Chief Minister welcomes the first transgender nurse

Penbugs