Penbugs
Cinema Inspiring

The Power House of Indian Cinema

Mass – Class – Raw – Cult – Experimental

இந்த எல்லாத்தையும் ருசிச்சு பார்க்குற
ஆளுங்க சினிமால ரொம்பவே கம்மி,
கடைசில இருக்க Cult & Experimental படங்கள்
எடுத்து பண்ண முன்னணில இருக்க
நடிகர்கள் தயங்குவாங்க,மார்க்கெட்டிங்
ரீதியாக படம் வசூல் தராதுன்னு ஒரு பயம்
தான் வேற என்ன,

இந்த ஃபார்முலாவ ஒடச்சது
இந்த ரெண்டு பேருன்னு சொல்லலாம்
கடந்த பத்து வருஷத்துல,

ரெண்டு பேர் வாழ்க்கையிலும்
கேளியும் கிண்டலும் அதிகமாகவே
இருந்திருக்கிறது,ஒருவர் உருவ
கேளி,இன்னொருவர் பிளாட்ஸ்டிக்
சர்ஜரி என உருவ அமைப்பு கேளி,

ஆனா அவங்க செஞ்சது ஒன்னே ஒன்னு
தான்,சூரியன பார்த்து நாய் குறைச்சுட்டே
இருந்தா நாய்க்கு தொண்ட வறண்டு
நீர்வளம் இல்லாம தண்ணிக்கு திசை தேடி
அலையும்,அதே தான் இவங்களும்
பண்ணாங்க,நாங்க சூரியன் போல்
தினமும் பிரகாசம் அடஞ்சுட்டே இருப்போம்,
எங்களை கேளி செய்தவர்கள் உங்களால
முடிஞ்ச அளவு கேளி செஞ்சுட்டே
இருங்க,எங்களோட பாதைய அது ஒரு
போதும் பாதிக்காதுன்னு தங்களோட
பயணத்த நோக்கி போய்கிட்டே தான்
இருக்காங்க,

தமிழ் ரசிகர்கள் இனிமே கொண்டாடப்போற
தனிக்காட்டு ராஜான்னு பேர் சொல்லுற
அளவு படத்துக்கு படம் தன்ன
மெருகேத்திட்டு போய்ட்டு இருக்கவர்
இவர்,எப்படி வெற்றிமாறன் படங்கள்ல
தனிச்சு தெரிவாரோ அதே மாதிரி அடுத்து
வரப்போகும் கர்ணன் படம் சொல்லும்
அவரின் அடுத்த ருத்ரதாண்டவத்தை,

வெற்றிமாறன் இல்லேன்னா தனுஷ்
இல்ல,தனுஷ் இல்லேன்னா வெற்றிமாறன்
இல்லன்னு சொல்லிட்டு இருந்தாங்க,ஒரு
ஜமீன் கோட்டைக்கு முகப்பு வாயில்
ரொம்ப முக்கியம்,அந்த முகப்பு வாயில
தாங்கிப்பிடிக்கிற தூண்கள் வலிமையா
இருக்கணும் அப்போதான் அந்த ஜமீன்
கோட்டைக்கே மவுசு,அந்த ஜமீன் கோட்டை
தான் இவர்களது படம்,முகப்பு வாயில் தான்
படத்தின் டைட்டில் கார்டு,டைட்டில் கார்டில்
இருந்தே இருவரும் தங்களது
தனித்துவமான ஆட்சியை கொடுத்து
படத்தை தாங்கிப்பிடிப்பார்கள்,ரெண்டு
பேருமே ரெண்டு பக்க தூண் அவங்க
படத்துக்கு,

அப்படியே மலையாளம் பக்கம் போனா
அவரு,ஸ்டார் நடிகர் வாரிசு தான்
என்றாலும் அவர் இப்போ இருக்க இடத்தை
தக்க வைக்க அவர் நடித்த படங்களின் கதை
அம்சங்கள் மட்டும் தான் காரணம்,

படத்திற்கு படம் வித்தியாசமான
கதைக்களம்,நடிப்பிலும் படத்திற்கு படம்
தன்னை தானே செதுக்கிக்கொண்டு அவர்
நடித்த படங்கள் மூலம் தன் தரத்தை
உயர்த்திக்கொண்டே தான் செல்கிறார்,

அது என்ன துல்கர் DP
வைக்கும்போதெல்லாம்

DQForLife – ன்னு Hashtag போடுறிங்கன்னு

நிறைய பேரு கேட்ப்பாங்க,

Simple!

ஒரு கேரக்டர் அவருக்கு கொடுத்துவிட்டால்
அந்த கேரக்டருக்கு தேவையான மொத்த
ஜீவனையும் அவர் குரல் வழி மூலமும் தன்
உடல்மொழி அசைவின் மூலமும் பிசுறு
இன்றி உயிரோட்டமாக தருவதில்
துல்கருக்கு நிகர் எவரும் இல்லை,

சார்லி,CIA,Ustad Hotel,Mahanadi,OK Kanmani -ன்னு
எல்லாரும் அவரை கொண்டாடினாலும்

DQForLife என்ற இந்த Hashtag -ற்கு

பொருத்தமாக நான் அவரை பார்ப்பது
இந்த இரண்டு படங்களில் மிகவும்
அதிகமாக,

“Kali & Solo”

உங்கள் வாழ்க்கையை
ஒரு படமாக எடுத்தால்
அதற்கு என்ன பெயர் வைப்பீர்கள்
என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டிருந்தார்,

“The Tales of an Aggressionist” என்று நான்
என் வாழ்க்கை சார்ந்த படத்தின்
டைட்டிலை அவரிடம் சொன்னேன்,
என் வாழ்க்கையில் நான் உணர்ந்த
கோபம்,தனிமை,வெறுப்பு,சோகம்,
காதல்,பிரிவு, வலி,ஆழ் மனதின்
வன்மம்,துரோகம்,கண்ணீர்,ஊடல்,
அன்பு,விரக்தி,அம்மா,அப்பா என
எல்லாமும் இந்த இரண்டு படங்களில்
துல்கராக என்னை நான் உணர்ந்து
இருக்கிறேன்,

World of Shekar – தனிமையும் கண்ணீரும்
World of Triolk – பிரிவும் ஆழ்மனதின் வன்மமும்
World of Shiva – மௌனமும் நெருப்பும்
World of Rudhra – ஏமாற்றமும் இழப்பும்,

வடக்குல இருக்க நடிகர் கூட்டம் தெற்குல
இருக்க நடிகர்கள்ல பார்த்தாலே வெறுக்குற
இந்த சமயத்துல ரெண்டு பேரும் Variety of
Characters – ன்ற விதத்துல “The Powerhouse of
Indian Cinema” – ன்ற ரேஞ்சுல இப்போ
நிக்குறாங்க,

இது நடிப்புக்கான பசி சார்
அவளோ சீக்கிரம் பசி தீராது,
இவங்க ரெண்டு பேரோட வளர்ச்சிய
பார்த்து மொத்த இண்டஸ்ட்ரியும் ஆச்சர்ய
படுதுன்னு சொல்லலாம் அதுக்கு காரணம்
மத்தவங்க என்ன சொல்றாங்கன்னு
கண்டுக்காம அவங்களோட தேடல நோக்கி
அவங்க போய்கிட்டே இருக்கனால தான்,

ஒரு கதைல இவன் நல்லவன்
இவன் கெட்டவன்னு சாய்ஸ் கொடுத்தா
ச்சூஸ் பண்ணுறது ஈஸி, இந்த கதைல
ரெண்டு பேரும் கெட்டவனுக என்ன பண்ண,

ரெண்டு பேரும் நல்ல படங்கள்
நடிச்சுட்டே இருக்கணும்
சாரல் மழை போல நாங்க அதுல
நனைஞ்ச்சுட்டே இருக்கணும்..!!

Picture Credits: RCM Promo..!

Related posts

Leave a Comment