Penbugs
Coronavirus

திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தையை முதலமைச்சர், துணை முதலமைச்சர் இன்று ஆய்வு!

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் அமைக்கப்படும் காய்கறி சந்தையினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று ஆய்வு செய்கின்றனர்.

கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவியதை அடுத்து, திருமழிசையில் 200 கடைகளுடன் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெறும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

இதையடுத்து, இன்று நள்ளிரவு முதல் சந்தை செயல்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நேரில் பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று மாலை திருமழிசைக்கு செல்கின்றனர்.இதனிடையே, கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டதன் எதிரொலியாக, சென்னையில் கடந்த 2 நாட்களாக சில்லறை விற்பனையில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

Picture Courtesy: The Hindu.