Penbugs
Editorial News

அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தல்

கொரோனா பரவிவரும் சூழலில் தபால் மூலம் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றால் மோசடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் ஆளும் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும் எதிர்கட்சியான ஜனநாய கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர்.

இதனிடையே இருவரும் கொரோனாவுக்கு மத்தியிலும் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் தபால் மூலம் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றால் மோசடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தபால் மூலம் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றால் 2020 ஆம் ஆண்டு தேர்தல், வரலாற்றில் மிகவும் தவறான மற்றும் மோசடியான தேர்தலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் “இது அமெரிக்காவிற்கு பெரும் சங்கடமாக இருக்கும். எனவே மக்கள் முறையாகவும், பாதுகாப்பாகவும், வாக்களிக்கும் வரை தேர்தலை தாமதப்படுத்துங்கள் .

என ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

Related posts

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது அமெரிக்கா

Penbugs

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை – டிரம்ப் அறிவிப்பு

Penbugs

US president Donald Trump and First Lady Melania Trump tested positive for coronavirus

Penbugs

Trump to ban Chinese airlines from flying to US

Penbugs

Trump suspends H-1B, H-4 visas till year end

Penbugs

Trump nominates Indian-American Attorney Saritha Komatireddy as US Federal Court judge

Penbugs

Trump cuts ties with WHO over COVID19 response

Penbugs

Rebuilding USA: Donald Trump appoints Vince McMohan as an economic advisor

Penbugs

Kimberly, Trump Junior’s girlfriend tested positive for COVID19

Penbugs

Donald Trump nominated for Nobel Peace Prize

Penbugs

Donald Trump calls India’s air quality as filthy

Penbugs

Leave a Comment