Penbugs
Editorial News

உலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவனம்…!

உலக சைக்கிள் தினத்தன்று புகழ்பெற்ற அட்லஸ் சைக்கிள் நிறுவனம் மூடப்பட்டது , மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஹீரோ, அட்லஸ், ஹெர்குலஸ் போன்ற சைக்கிள் நிறுவனங்கள் இயங்கி வந்தன. பைக்குகள் விதவிதமாக பெருகி விட்ட இந்த காலத்தில் சைக்கிள் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்தன.. சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு சிறந்த உடற்பயிற்சி. எனவே, உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர்கள் சைக்கிளின் மகிமையறிந்து அவற்றை வாங்கினர்.

சைக்கிள் விற்பனை மந்தமான நிலையில் ஹரியானாவில் இயங்கி வந்த அட்லஸ் சைக்கிள் நிறுவனத்தின் கடைசி தொழிற்சாலையும் உலக சைக்கிள் தினமான ( ஜூன் 3- ந் தேதி) மூடப்பட்டு விட்டது. நிதிச்சுமை காரணமாக நிறுவனம் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படடுள்ளது. ஷாகீபாபாத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை வாசலில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸில் , ‘இப்போதுள்ள சூழ்நிலையில் நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவது சாத்தியமில்லை. மறு அறிவிப்பு வரும் வரை தொழிற்வாலை மூடப்படுகிறது ” என்று அறிவிக்கப்ட்படுள்ளது.

மாதம் ஒன்றுக்கு இந்த தொழிற்சாலையில் 2 லட்சம் சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது தொழிற்சாலை மூடப்பட்டதால் 700 தொழிலாளர்கள் பணி இழந்துள்ளனர். ஹரியானாவில் 1951- ம் ஆண்டு சோனிபேட் என்ற இடத்தில் அட்லஸ் நிறுவனம் முதல் தொழிற்சாலையை அமைத்தது. நாள் ஒன்றுக்கு 12,000 சைக்கிள்களை உற்பத்தி செய்தது.

1958- ம் ஆண்டு வெளிநாடுகளுக்கும் சைக்கிள்களை ஏற்றுமதி செய்தது. 2000- ம் ஆண்டு வரை சைக்கிள்கள் விற்பனை அமோகமாகவே இருந்தது. காலப்போக்கில் சைக்கிள்களை வாங்கும் வழக்கம் குறைந்து போனது. இதனால், அட்லஸ் நிறுவனம் 2014- ம் ஆண்டு மத்தியபிரதேச மாநிலம் மலன்பூரில் உள்ள தொழிற்சாலையை மூடியது. 2018-ம் ஆண்டு சோனிபட் தொழிற்சாலையும் மூடப்பட்டது . கடைசியாக ஷாகீபாத் தொழிற்சாவையும் மூடப்பட்டு விட்டது.