Penbugs
CinemaEditorial/ thoughtsShort Stories

உலக இசை தினம் இன்று …!

இசைய வைத்தல் என்பதன் சுருக்கமே “இசை” . மனிதன் மட்டுமில்லாமல் அனைத்து வகையான உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கும் வல்லமை படைத்தது இசை ‌…..!

இசைக்கு என்று தனி வடிவம் இல்லை அந்த அந்த வாழ் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஏற்புடையதாக உள்ள அனைத்து முறைப்படுத்தப்பட்ட ஓசைகளும் இசைதான் ….!

சங் “கீதம் ” என்பது செவிக்கு இன்பம் தருவது . அதனால்தான் இசை வல்லுனர்களை சுலபமாக மக்கள் விரும்புகின்றனர்….!

இந்தியாவை பொறுத்தவரை நாட்டுப்புற இசை , கர்னாடக இசை ,இந்துஸ்தானி இசை இது இல்லாமல் மேற்கு நாடுகளின் தாக்கத்தினால் வந்த மேற்கத்திய இசை , தமிழகத்தில் முக்கியமாக சென்னையின் கானா இசை என பல்வேறு வடிவங்களில் இசை தொடர்ந்து நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது ….!

அடித்தட்டு மக்களில் இருந்து பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் மேல்தட்டு மக்கள் வரை ஏதோ ஒரு பிரச்சினையில் பயணிக்க வேண்டிய சூழலில் அனைத்து தரப்பில் உள்ள மக்களையும் கட்டிபோட்டு வாழ்க்கையை தொடர உதவுவது இசை மட்டுமே …!

தமிழகத்தை பொறுத்தவரை திரையிசை பாடல்களின் தாக்கம் அதிகம் எந்த அளவிற்கு என்றால் திரைப்பாடல்களும் ஒரு முக்கிய காரணியாக இருந்து ஆட்சி பெற்றவர்கள் இங்குண்டு ….!

கேவி மகாதேவன் தொடங்கி நேற்று வந்த ஆதி வரை மக்களுடன் அவர்களை கொண்டு சேர்த்தது இசை மட்டுமே …!

விவசாய வேலையா , கட்டிட வேலையா இல்லை கார்ப்பரேட் கம்பெனி வேலையா எதுவாக இருந்தாலும் குறைந்தது ஒரு பாடலின்றி அந்த நாள் யாருக்கும் கழிந்ததில்லை …!

இளையராஜாவின் இசையின்றி தூக்கம் வராத ஆட்கள் அதிகம் . மனநல மருத்துவர்களை விட இளையராஜாவின் இசையால் மன அழுத்தம் நீங்கியவர்கள் பலர் உண்டு அத்தகைய வலிமை இசைக்கு உள்ளது …!

இசை நமது கலாச்சாரத்தின் வளர்ச்சி தெருக்கூத்திலிருந்து லேட்டஸ்ட்டாக வந்த அனிமேசன் வரை அனைத்திலும் இசையை ஒரு அங்கமாக இருக்க வைத்து கொள்வது நமது உளவியல் பண்பாடு ….!

நல்ல இசையை கேட்டு நீண்ட நாள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உதவிக் கொண்டு வரும் அனைத்து இசை வல்லுனர்களுக்கும் நன்றி சொல்லும் நாள் இது …!

Related posts

வித்யாசாகர் எனும் சேமிப்பு காதலன்

Shiva Chelliah

ராகதேவனுடன் ஓர் அகவை தின பயணம்!

Shiva Chelliah

மனிதம்..!

Shiva Chelliah

திரு.குரல்..!

டார்லிங் ஜி.வி.பி-க்கு அகவை தின வாழ்த்து மடல்

Shiva Chelliah

சைக்கோ | Psycho – Movie Review

Anjali Raga Jammy

இசை அசுரன் ஜீவி பிரகாஷ்!

Kesavan Madumathy

We have to celebrate his life: AR Rahman on SPB

Penbugs

Vijay Sethupathi turns Rayanam for “Uppena”

Penbugs

Tholaigirene: A Blissfully Candid musical that immediately stays with you!

Lakshmi Muthiah

Thaman to compose for Vijay in his next?

Penbugs

SPB ordered a statue of himself before his death

Penbugs