அஜித்தின் வலிமை படத்தின் முன்னோட்டம் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியானது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் ‘வலிமை’ திரைப்படத்தில் கதாநாயகனாக தல அஜித் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார்.
வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார்.
படத்தின் போஸ்டர்கள் மற்றும் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
வலிமை திரைப்படம் வரும் 2022-ம் ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.