Penbugs
Cinema

நடிகர் வேணு அரவிந்த் கோமாவில் இல்லை:அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பல சின்னத்திரை தொடர்களிலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்த நடிகர் வேணு அரவிந்த் .

வேணு அரவிந்த் கோமாவில் இருப்பதாகவும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இன்று காலை செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சின்னத்திரை நடிகர் அருண் ராஜன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் வேணு அரவிந்த் அவர்கள் கோமாவில் இல்லை என்றும் அவர் தற்போது நினைவுடன் தான் இருக்கிறார் என்றும் தனக்கு செய்யப்படும் சிகிச்சை குறித்து அவர் கேட்டறிந்து வருகிறார் என்றும் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

https://www.instagram.com/tv/CR50xGOh7n7/?utm_medium=copy_link

இதே போன்று தீபா ராமானுஜன் என்பவரும் தனது முகநூல் பக்கத்தில் வேணு அரவிந்த் கோமாவில் இல்லை என்றும் குடும்பத்தினருடன் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

https://m.facebook.com/story.php?story_fbid=10159548286874188&id=781414187

Leave a Comment