Penbugs
Cinema Short Stories

வித்யாசாகர் எனும் சேமிப்பு காதலன்

இளஞ்சூரியனின் கதிர்கள்
பூமியில் விழுந்த காலை வேளையில்
ரோஜா பூ ஒன்று அந்த தோட்டத்து செடியில்
மலர்ந்து இருந்தது, மொட்டுக்கள் விரிந்து
பூத்திருந்த ரோஜாப்பூவை
அவள்(பாமா) தலையில் சூடினாள்,

அதிகாலை குளியல் முடித்து விட்டு
80’s பெண்களின் கலாச்சாரமான
ஜாக்கெட் அணியா சேலையுடன்
பெண்களுக்கே உரிமை கொண்ட ஈரக்கூந்தலில்
அந்த ரோஜாப்பூவை அவள் தலையில் சூடினாள்,
அந்த பக்கமாக நடந்து வந்த அவன்(வித்யாசாகர்)
அவள் மலர் சூடும் அழகில்
முருகனால் சூரசம்ஹாரம் செய்யப்பட்ட
சூரபத்மன் போல் அவள் முன் வீழ்ந்தான்
தன் மூக்குக்கண்ணாடியை சரி செய்த படி,

மேலும் சில தோட்டது மலர்களை
அவள் பறித்துக்கொண்டிருக்க
அவளை மிரட்டும் வண்ணம்
குழந்தை போன்ற செல்ல பாவனைகளுடன்
தோட்டத்தினுள் வித்யாசாகர் ஓடி வந்து
எல்லா பூவையும் பறிச்சுடுவ போலயே,
உன்ன யாரு பூ பறிக்க சொன்னா..?
நான் எல்லாத்தையும் எண்ணி எண்ணி வச்சுருக்கேன்
மஞ்சள் -ல பத்து சிகப்பு – ல ஏழு என்று
ஆண்களுக்கே உரிய செல்ல கோபத்தை
அவளிடம் வழிமொழிகிறான் வித்யாசாகர்

பூவ எல்லாம் எதுக்கு எண்ணுறிங்க
என்று பாமா அவனிடம் கேட்கிறாள்..?

ஏன் எண்ணுறேனா..?
எண்ணலேனா கண்ட கழுதயெல்லாம்
பறிச்சுட்டு போயிடும், இப்போ நீ பறிக்கல..?
மொத்தம் 17 இருந்தது,
இத யாரு பறிக்க சொன்னா என்று
பாமா தலையில் சூடிய ரோஜாப்பூவை
கையில் எடுக்கிறான் வித்யாசாகர்,
கையில் எடுத்த பூவை மழலை போல்
வேறு ஒரு மரத்தின் கிளையில்
அவள் பறித்த ரோஜாப்பூவை
மீண்டும் கோர்த்து வைக்க முயலுகிறான்,
பிறகு ஒவ்வொரு பூவாக
சரியாக இருக்கிறதா என்று
வித்யாசாகர் எண்ணிக்கையை கணக்கெடுக்கிறான்,

பாமா வித்யாசாகரின் செயல்களை
தன் இமைக்கா நொடிகள் வாயிலாக
பார்த்து கொண்டே இருந்தாள்,
இதை கவனித்த வித்யாசாகர்
என்ன என்ன பாக்குற..? என்று
பாமாவிடம் கேட்கிறான்,

நீங்க ரொம்ப கருமி போலயே
என்று பாமா இவனிடம் கேட்கிறாள்

கருமியா ஆமா நீங்க ரொம்ப தாராளம்
அதான் எல்லாத்தையும் பறிச்சுட்டு இருக்கீங்க,
பாமா..? யாருமே
பணத்துல கருமியா இருந்தா தப்பே இல்ல,
புறத்து யாருக்கும் அன்பு காட்டுறதுல மட்டும்
கருணையா இருக்கக்கூடாது
என்கிறான் வித்யாசாகர்,

சார் நான் உங்ககிட்ட
ஒன்னு கேக்கணும்னு நினைக்குறேன்
என்கிறாள் பாமா..?

கேளு கேளு என்ன என்று
மிகுந்த ஆவலுடன் வித்யாசாகர்
அவளிடம் வினாவுகிறான்

எனக்கு முன்பணம் கொஞ்சம் வேண்டும்
என்று அவனிடம் கடன் உதவி கேட்கின்றாள்,

போச்சு உன்ன பொறுத்தவரைக்கும்
நான் கொஞ்சம் கருமியா இருந்தா தான்
நல்லதுன்னு நினைக்குறேன் என்கிறான்

என்ன இருந்தாலும்
நான் உங்க வேலைக்காரி தான சார்,
சம்பளத்த மட்டும் தான
உங்ககிட்ட எதிர்பார்க்கமுடியும் என்கிறாள் பாமா,

அத மட்டும் தான் எதிர்ப்பார்க்கக்கூடாது,
பாமா நாம எப்பவுமே
இந்த பணத்துல குறியா இருக்கக்கூடாது
அது ரொம்ப தப்பு என்று சொல்லியபடியே
அவள் தலையில் இருந்து தான் பறித்த
அந்த ரோஜாப்பூவை நிறம் மாறாமல்
மணம் மாறாமல் மறுபடியும்
அவளிடம் கொடுக்கிறான் வித்யாசாகர்,

இது கடையில ஐம்பது பைசா,
நான் சும்மா தரேன் வச்சுக்கோ என்று
ஐம்பது பைசா ரோஜாப்பூவில்
தன் அன்பையும் அவளுக்கு பரிசாக தருகிறான்,

ஆமா இங்கத்தான் குளிச்சியா,
எத்தன பக்கெட் தண்ணி புடிச்ச?
பரவாயில்ல தண்ணி ரொம்ப வேஸ்ட் பண்ணாத,
இங்க ஆறு மணிக்கு மேல Tapல தண்ணி வராது
என்று பணம் மட்டும் வாழ்கை இல்லை
அதனினும் சிக்கனத்தின் அவசியத்தை
அவளுக்கு உணர்த்தியவாரே
அவள் கையில் வைத்திருந்த ரோஜாப்பூவை
தலையில் வைத்துக்கொள் என்றான் வித்யாசாகர்

பாமா வித்யாசாகரை தன் ஈர்ப்பு விசை
சொக்கி இழுக்கும் பார்வையில்
அவனை பார்த்தவாறு ரோஜாப்பூவை
தன் இருப்பிடத்திற்கு கொண்டு சேர்த்தாள்
மறுபடியும் அந்த ஈரக்கூந்தல்களின் ஒரு ஓரத்தில்,

நல்லாருக்கு,
ஐம்பது பைசா
இனிமே என்ன கேக்காம
இந்த பூவெல்லாம் பறிக்காத..?
உன்ன வேலைக்காரிய நினைக்குறதுக்கு
எனக்கு மனசே வரமாட்டீது,

ஆமா, பணம் கேட்டேல என்று
தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த
பணக்கட்டை கையில் எடுத்துவிட்டு
“அப்பறம் தரேன்” என்று
மறுபடியும் பேண்ட் பாக்கேட்டிலயே
வைத்துக்கொள்கிறான் வித்யாசாகர்,

ஆமா உனக்கு அம்மா அப்பா
தங்கச்சி அண்ணா எல்லாரும் இருக்காங்களா
என்று கேட்டான் வித்யாசாகர் பாமாவிடம்,

நான் ஒரு அனாதை
என்று வந்தது பாமாவின் பதில்,

அதற்கு மறுப்பு தெரிவித்த வித்யாசாகர்,
பாமா ஒருத்தர்கிட்ட
எக்கச்செக்கமா பணம் இருக்கலாம்,
ஆனா அவங்களுக்கு அன்பு காட்ட
ஆள் இல்லேனா அவங்கதான் அனாத
அன்பு காட்ட ஆள் இருந்தா
இந்த உலகத்துல யாருமே அனாத இல்ல,

இப்போ உனக்கு பணம் வேணுமா..?
இல்ல என்று தன் கேள்வியை இழுக்கிறான்..?

எனக்கு பணம் வேணாம் என்று பாமா கூறுகிறாள்,
மௌனம் சம்மதம் என்பது போல்
அன்பு தான் வேண்டும் என்று
மௌன மொழி புரிகிறாள்,

இசை ஒலிக்க தொடங்குகிறது
வித்யாசாகர் தன் கையில்
சலூன் கடை கத்திரிக்கோலுடன்
தன் கை அசைவு வித்தைகளை காட்டிக்கொண்டிருக்கிறான்,

பாடல் துவங்குகிறது

செனோரிட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ என்று..?

வித்யாசாகர் புகைக்கும் Pipe சிகரெட்டின் அழகும்
பாமாவின் அழகு மிகுந்த பாவனையின் கீற்றும்
அவர்கள் இருவரும் மனம் விட்டு
உரையாடும் அரட்டைகளும்
வித்யாசாகரின் பூட்கட் என்னும் பெல்ஸ் பேண்ட்டும்
வித்யாசாகரின் குறும்புச்சேட்டைகளும்
என்று இருவரின் காதலும் அழகாக மலரும்,

இடையில் ஒரு விஷயம் நடக்கும்,

தங்களுக்கு குழந்தை பிறந்தால்
அக்குழந்தையை தன் கையில் ஏந்திய படி
வித்யாசாகர் தாலாட்டு பாடுவான் கற்பனையாக
காற்றில் தன் கையை அசைய விட்டு,
குழந்தைக்கு கற்பனையில் தடவிக்கொடுப்பான்
குழந்தை இவன் ஆடையில்
மூத்திரம் பெய்து விடும் கற்பனையில்,
அதை பார்த்த பாமா குலுங்கி குலுங்கி சிரிக்கிறாள்
குழந்தையை பாமா கையில் கொடுத்து விட்டு
தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த
கைக்குட்டையில் குழந்தை பெய்த மூத்திர மழையை
தன் ஆடையில் இருந்து துடைத்து எடுக்கிறான்,
கையில் ஏந்திய குழந்தையை
கற்பனை மாறா பாமாவும் தாலாட்டுகிறாள்,

இங்கு வித்யாசாகரின் காதலும்
கற்பனையில் தான் மலர்ந்தது
பாமா செய்த துரோகத்தினால்,

முழு கதை தெரிய வேண்டும் என்றால்
திரு.மகேந்திரன் அவர்கள் இயக்கி
1980இல் வெளிவந்த
ஜானி திரைப்படத்தை பார்க்கவும்

கதாப்பத்திர உருவங்கள் :
வித்யாசாகர் & பாமா : திரு.ரஜினிகாந்த் & தீபா

Special Dedication :
Dir Mahendran Sir & John Mahendran Sir \m/

  • அழகியலின் பிம்பங்கள் 💛

Related posts