Penbugs
Cinema

வித்யாசாகர் ஒரு வித்தைக்காரன்..!

எப்பொழுதுமே ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் இருக்கும் ரோஜா செடி அதிகம் கவனிக்கப்படாமல் போகும் வாய்ப்பு அதிகம் அது மாதிரிதான் இசைத்துறையில் ராஜா ,ரகுமான் என்ற இரு பெரும் ஆலமரத்தடியில் மெல்லிய பூச்செடியா இருந்தவர் வித்யாசாகர் …!

பொதுவா நம்ம மக்கள் தங்களின் மகிழ்ச்சி ,சோகம் என எது வந்தாலும் இசையையே நாடிச் செல்வோம் . அந்த மாதிரி அன்றாட வாழ்க்கையில் நம்மோடு இரண்டற கலந்து இருக்கும் இசையை நமக்கு கொடுக்கிற எல்லாருமே ஒரு வகையில் டாக்டர்தான். அப்படி ஒரு டாக்டர் தான் வித்யாசாகர் அவரின் ஸ்பெசல் குத்து பாட்டும் போடுவார் ,மெலடி சாங்கும் போடுவார் , இரண்டுமே பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆகும்…!

வித்யாசாகரும் இசை சொல்லிக்கொடுத்தவர் தன்ராஜ் மாஸ்டர்.அவரிடம் கற்றுக் கொண்ட பின் ராஜா சாரிடம் இசை கோர்க்கும் வேலைக்கு சேருகிறார்.

இளையராஜா இசையமைத்த ’16 வயதினிலே’ படத்தில் இருந்து அவரிடம் பணியாற்றத் துவங்குகிறார் வித்யாசாகர். ராஜாவிடம் வேலை செய்யும்போது அவரின் வயது பன்னிரெண்டு …!

80-களின் இறுதியில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன‌ போது அவரின் பாடல்கள் ராஜாவின் சாயலில் இருப்பதாக பெரிதும் விமர்சிக்கப்பட்டது ஆனால் அது அவருக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக தான் எனக்கு தெரிகிறது . 90 ல் இருந்து 94 வரை தெலுங்கு திரை உலகத்திற்கு ஒதுங்கிய வித்யாசாகர் நாலு வருடத்தில் இசையமைத்த படங்கள் சுமார் 39 …!

அப்போதுதான் மறுபடியும் தமிழில் ஜெய்ஹிந்த் பட வாய்ப்பு , 1994-ல் அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த ‘ஜெய்ஹிந்த்’ திரைப்படம்தான் தமிழில் இவருக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது. ‘தாயின் மணிக்கொடி’, ‘ கண்ணா என் சேலைக்குள்ள ‘, ‘முத்தம் தர ஏத்த இடம்’ போன்ற பாடல்களால் மொத்த ஆல்பமும் ஹிட் , தமிழ் திரை உலகத்தில் வித்யாசாகர் என்ற பெயர் எங்கும் பரவியது …!

” கர்ணா ”

ரகுமானின் புகழ்பெற்ற மெலோடிகளுக்கு நடுவே இவரின் இசையில் எஸ்.பி.பி, ஜானகி பாடிய மலரே மௌனமா பாட்டு கேட்போரை மெய் மறக்க செய்தது …!

பல்லவி தொடங்கும் முன் வரும் புல்லாங்குழல் இசை, குருவிச் சத்தம் எனப் பாட்டுக்கு நம்மைத் தயார் செய்துவிட்டு எஸ்.பி.பி குரலில் அந்த முதல் வரி… `மலரே… மெளனமா’ வரும்போது ப்ப்பா இந்த நொடி கேட்டால் கூட புல்லரிக்க வைக்கும் ஒரு‌ பாட்டு ‌…!

பிளாஷ்பேக் :

வைரமுத்து மலரே மௌனமா பாடலுக்கான வரியை எழுத எஸ்பிபியும் ,ஜானகி அம்மாவும் வித்யாசாகர் தர்பாரி ராகத்தில் அமைந்த மெட்டை போட்டு காட்ட பாடல் பதிவேற்றம் ஆனது இரு பாடகர்களும் போட்டி போட்டு கொண்டு தனது திறமையை காட்ட பாட்டை எஸ்பிபி வித்யாசாகரிடம் கொஞ்சம் பாட்டை போட்டு காட்டுவீங்களா என்று கேட்க வித்யாசாகரும் பாடலை போட்டு காட்டினாராம் முழு பாடலையும் கேட்ட எஸ்பிபி தான் பாடிய இடத்தை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி வித்யாசாகரை அணைத்து இந்த ஒரு பாட்டு போதும்யா என் வாழ்க்கைக்கு என்று உச்சி குளிர்ந்து பாராட்டினாராம்…!

தமிழ் , தெலுங்கு , மலையாளம் என‌ அனைத்து இடங்களிலும் ஹிட் கொடுத்த ஒரு இசையமைப்பாளர் வித்யாசாகர் ..!

எஸ்பிபி ஒரு பேட்டியில் சொன்னது இசையில் A to Z ராஜாவிற்கு அப்பறம் தெரிந்த ஒரு இசையமைப்பாளர் என்றால் அது வித்யாசாகர் …!

ரஜினிக்கு சந்திரமுகி ,கமலுக்கு அன்பே சிவம் , அஜித்திற்கு பூவெல்லாம் உன் வாசம் ,விக்ரமுக்கு தூள்,தில் ,மாதவனுக்கு ரன் என அவர்களின் கேரியரில் பெஸ்ட் ஆல்பத்தை தந்த வித்யாசாகர் விஜய் என்று வரும்போது மட்டும் ரொம்பவே ஸ்பெஷல் ஏனென்றால் விஜய் – வித்யாசாகர் காம்போ நூறு சதவிகித வெற்றி காம்போ.கில்லி , ஆதி , மதுர , திருமலை , காவலன் என அனைத்து ஆல்பங்களுமே விஜயின் கேரியரில் முக்கியமான படங்கள்‌…!

வித்யாசாகர் – ராதாமோகன் கூட்டணியும் மிகவும் ரசிக்கதக்க கூட்டணி .மொழி , அபியும் நானும் படமெல்லாம் அழகியலின் உச்சம் …!

ஹிட் பாடல்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கூட நிறைய பாட்டு வரும் அவ்ளோ ஹிட் கொடுத்த ஒரு இசையமைப்பாளர் வித்யாசாகர் …!

பூவாசம் புறப்படும் பெண்ணே (அன்பே சிவம்), ஆலங்குயில் கூவும் ரயில் (பார்த்திபன் கனவு),காற்றின் மொழி (மொழி),டிங் டாங் கோயில் மணி (ஜி), `சித்திரையில் என்ன வரும் (சிவப்பதிகாரம்),ஆசை ஆசை (தூள்), `கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் (சந்திரமுகி),கண்டேன் கண்டேன் (பிரிவோம் சந்திப்போம்),காதல் வந்தால் சொல்லி அனுப்பு (இயற்கை), இத்தனூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா,தேரடி வீதியில் தேவதை வந்தா, காதல் பிசாசு,மச்சான் மீச வீச்சருவா, எல மச்சி மச்சி , தாம் தக்க தீம்தக்க தையத்தக்க கூத்து, வாடியம்மா ஜக்கம்மா, நீயா பேசியது என்‌ அன்பே , யாரிது , என பாடலின் எண்ணிக்கை ஏறிக் கொண்டே போகும் …!

எனக்கு பிடித்த டாப் ஆல்பங்கள் :

அன்பே சிவம் ,கர்ணா , பூவெல்லாம் உன் வாசம் , காவலன் , ரன் ,மொழி , அபியும் நானும் …!

இப்போது அதிகம் தமிழ் படத்தில் இசையமைக்கவில்லை என்றாலும் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் ..!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வித்யாசாகர்..!

Related posts

பாப்டா அமைப்பின் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நியமனம்

Penbugs

தும்பி துள்ளல் – ரகுமானின் மேஜிக்

Penbugs

கௌதமை அறிந்தால்..!

Penbugs

கேப்டன் விஜயகாந்தின் காணொளி

Penbugs

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி டிவிட்

Penbugs

என் நெஞ்சில் குடியிருக்கும் தளபதி

Shiva Chelliah

இழந்த பணம், புகழை மீட்டுவிடலாம்; நேரத்தை மீட்க முடியாது – ஏ.ஆர்.ரஹ்மான்

Penbugs

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் துருவ நட்சத்திரம்..!

Penbugs

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் “தளபதி விஜய் “

Kesavan Madumathy

இசையின் ஏக இறைவா..!

Kesavan Madumathy

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தாயார் சென்னையில் இன்று காலமானர்.

Penbugs

இசைப்புயலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Kesavan Madumathy