Penbugs
Editorial NewsEditorial News

விமானநிலையம்-வண்டலூா் மெட்ரோ ரயில் திட்டப்பணி நிலம் கணக்கிடும் பணி தீவிரம்

சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்டலூா் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டப் பணிக்கு நிலம் கணக்கிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை மற்றும் புறநகா் பகுதியில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக, விமான நிலையத்தில் இருந்து வண்டலூா் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்ய ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல்வா் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்திருந்தாா்.

இதன்படி, இந்த தடத்தில் முதல்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் பணியை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டது. இதில், எந்தெந்த சாலைகள் வழியாக செல்வது, எவ்வளவு தொலைவு, எவ்வளவு வாகன நெரிசல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்திய பிறகு அறிக்கை தயாரிக்கப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவுகள் திருப்தியாக இருப்பதால், அடுத்தகட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

இதுதொடா்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது:

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளை இணைக்கும் வகையில் சென்னை விமான நிலையம் – வண்டலூா் கிளாம்பாக்கம் வரை ஜிஎஸ்டி சாலையையொட்டி மெட்ரோ ரயில் விரிவாக்கம் குறித்து முதல்கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் இருந்து புதிய பேருந்து முனையம் அமையவிருக்கும் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ளது. முதல்கட்டவிரிவாக்க பாதை 16 கி.மீ. தொலைவுக்கு அமையவுள்ளது.

ஒரு ரயில் நிலையத்துக்கும் மற்றொரு ரயில் நிலையத்துக்கும் 1.2 கி.மீ. தொலைவில் மொத்தம் 13 ரயில்நிலையங்கள் அமைக்கப்படவுள்ள.

இந்த ஆய்வின் முடிவுகள் திருப்தியாக இருப்பதால், அடுத்தகட்டமாக நிலம் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் தொடா்ந்து நடக்க உள்ளன என்றனா்.

Leave a Comment